பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




182

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

எய்தினார். அவர்தம் உடைமைகளை எல்லாம் அரசினர் எடுத்து வந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓர் அறையில் வைத்துப் பூட்டினர். அதன்பின் அதனைக் கருதுவார் இன்றி அமைந்தது.

இச் செய்திகளைத் திருவருள் துணையால் 1966 இல் கழக ஆட்சியாளர் அவர்கள் அறிந்தனர். மருத்துவ அகராதி எந்த அளவில் அச்சிடப்பெற்றிருக்கிறது என்பதை அறிய விரும்பு வதாகச் சென்னை மாவட்ட ஆட்சியாளரிடம் வேண்டினர். அவ்வறை தூசி தும்பு ஒட்டடை படிந்து கிடந்தது. அதனைத் தூய்மை செய்து உள்ளே செல்ல, ஒரு கள்ளிப்பெட்டி நிறைய மருத்துவ நூல்களும் நிகண்டு நூல்களும் செல்லுக்கு இரையாகிச் சிதைந்து கிடந்ததைக் கண்டு நோவுற்றனர். ஓர் இரும்புச்சட்ட அடுக்கில் (Steel rack) அச்சிட்ட அகராதிப் படிவங்கள் சில படிகளும், இறுதியில் 2174 எண்ணுள்ள பக்கம் வரை அச்சிட்ட படிவங்களும் இருந்தன. அதன் ஓர் அடுக்கில் பள்ளியிறுதிச் சான்றிதழ் ஒன்று இருந்தது. அதில் திரு. தி. வி. அண்ணாமலைப் பிள்ளை, அம்மாப்பேட்டை, (தஞ்சை மாவட்டம்) என்ற முகவரி காணப்பெற்றது. அதைக்கண்டு இவர்சாம்பசிவம் பிள்ளையின் தம்பியராக இருக்கவேண்டும் என்று ஊகித்தனர். உடனே அண்ணாமலைப் பிள்ளை அவர்கட்கு, 'ஐயா, யான் திரு. தி.வி. சாம்பசிவம்பிள்ளை அவர்களுடைய படமும் வரலாறும் பெறுவதற்கு முயன்று வருகின்றேன். தாங்கள் அவருடைய தம்பியராக இருத்தல் வேண்டுமென்று தெரிகிறது. படமும் வரலாறும் தருவீர்களாயின் தங்கட்கு நன்றி மிகவும் உடையனே ஆவேன்" என்று கடிதம் வரைந்தனர். அக் கடிதம் கிடைத்ததும் அவர்கள் வியப்புற்றுத் தாம் சாம்பசிவம்பிள்ளை உடன் பிறந்தார் தாம் என்றும், அண்மையில் சென்னைக்கு வரும்போது படத்தினை எடுத்து வருவதாகவும் மறு மொழி எழுதினர். அவர்கள் எழுதியபடி படத்தைக் கொண்டு வந்து சேர்ந்தனர். வரலாற்றுக் குறிப்பும் கூறினர். இவ்வகையில் திரு. சாம்பசிவம் பிள்ளை அவரகளின் படமும் வரலாறும் தமிழ் உலகம் அறிய வாய்ப்பு உண்டாயிற்று.

அப் பெருமகனார் உழைப்பையும் உணர்வையும் நெஞ்சார நினைந்து நெக்குருகி ஆட்சியாளர் கூறும் உரை பொன் னெழுத்தில் பொறிக்கத்தக்கதாம். 'தலைமுறை தலைமுறைக்கும் நீடுபயன் தரக் கூடிய செய்தற்கரிய பெரிய தொண்டில் ஈடுபட்டு, அரசு அரவணைப்பில் இருக்கவேண்டிய துன்பநிலை எய்திப்