பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26. உலகுவக்கும் ஒரு பணி

("தாம் இன்பம் அடைகின்ற கல்வியால் உலகமும் இன்பம் அடைவதைக் கண்டு களிப்புறும் கற்றோர் மேலும் அதனையே விரும்புவர்."திருக். 399)

திருவள்ளுவரைப் பெற்றதால் தமிழர் பெற்ற பெருமைக்கு எல்லை இல்லை. எவ்வொன்றுக்காக இல்லை என்றாலும் திருக்குறளைத் தந்த ஒன்றற்காகவே உலகம் தமிழர்க்குப் பெருங்கடப்பாடு உடையதாகும்.

"திருக்குறள் பிறந்த மண்ணுக்குப் போய் அறிவுரை கூறுவது போன்ற அறியாமை ஒன்றும் இல் ைல” என்றும், 'மாந்தனே! நீ வாழப் பிறந்தவன்; தெய்வ நிலைக்கு ஏறத்தக்கவன்! என்று தட்டிக்கொடுத்து நம்பிக்கையூட்டி உயர்த்தும் ஒரே நூல் திருக்குறளே' என்றும் மேலை நாட்டவரும் போற்றியுரைக்கும் பெற்றியது திருக்குறள்.

திருக்குறளை மூலத்தில் படிப்பதற்காகவே தமிழைக் கற்க வேண்டும்" என்று ஆர்வத்தை எழுப்புவதும் திருக்குறளே! உலகிலேயே - சமய நூல்கள் சிலவற்றைத் தவிர - பொது நூல் வரிசையில் மிகுதியான மொழிபெயர்ப்புப் பெற்றதும் திருக்குறளே! அத் திருக்குறளைக் கொஞ்சும் குழந்தையெனக் கொஞ்சி, பெற்ற தாயெனப் போற்றி, வணங்கும் தெய்வமென வாழ்த்திசைத்து வருபவெர் தமிழ்ப்பெருங்காவலர் வ. சுப்பைபிள்ளை அவர்கள் ஆவர். தாம் பெற்ற திருக்குறள் இன்பத்தை உலகும் பெற்று இன்புறத் தொண்டாற்றுவது தலையாய கடனெனக் கொண்டார்.

திரு. வ.சு. அவர்கள் பாளையங்கோட்டை தூயசவேரியர் உயர்பள்ளியில் பயின்று கொண்டிருந்த நாளையிலேயே திருக்குறளை அறிவார். அரங்கர், கொழும்பில் இருந்து அருமையாய் எழுதிய கடிதங்களில் திருக்குறள் அறிவுரைகள் கமழும், அதனால் அந் நூலைப் பயில வேண்டும் என்னும் ஆரவம் அப்பொழுதே இவருக்கு அரும்பிது.