பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




202

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

திரு. சி. பி. சுப்பையாபிள்ளை என்பார் ஒரு வழக்கறிஞர். அவர் மனைக்குத் திரு.வ.சு. சென்றிருந்தார். அவர் தம் கைக்குள் ஒன்றை வைத்து மூடி மறைத்துக்கொண்டு, “தம்பி, என் கைக்குள் இருப்பது என்ன, சொல்லும் பார்ப்போம்" என்றார். அதற்கு வ.சு. “என்ன அண்ணா, எனக்குக் குறி சொல்லத் தெரியாதே!” என மறுமொழி கூறினார். அவர் தம் கையைத் திறந்து சேக்சுபியர் இயற்றிய ஒதல்லோ நாடகம்" என்பதைக் காடினார் அது 5 × 4 செ. மீ. அளவில் இருந்தது. அதனைக் கண்டு வியந்தார் வ.சு., அதே அளவில் சேக்சுபியர் நாடகங்கள் எல்லாமும் வெளியிடப்பெற்றுள்ளன என்னும் செய்தியையும் வழக்கறிஞர் வழியே அறிந்தார். நம் தெய்வத்திருக்குறள் இதே அளவில் வெளிவந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்றார் வ.சு., வழக்கறிஞர் சுப்பையாபிள்ளை நம் சுப்புவை வியந்து பாராட்டித் தட்டிக்கொடுத்தார். இந்த இளந்தை ஆர்வத் தூண்டலே 1942 இல் 6x4 செ. மீ. அளவிலான திருக்குறள் மூலத்தைக் கொணரச் செய்ததாம். அவ்வாறு கொண்டு வருவதற்கு உதவியவர் திரு. காஞ்சி மணிமொழியார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதே குறளைத்தான் கலைவாணர் என். எசு. கிருட்டிணன் அவர்கள் பணம் என்ற படத்தில் "இதோ உலகம் பாருங்கள்” என்று தம் வலக்கைப் பெருவிரல், சுட்டு விரல்களுக்கு இடையே வைத்துக் காட்டுகிறார்.

இந் நூலின்கண் திருக்குறளைப் பக்கத்துக்கு ஓரதிகாரமாக அமைக்க இயலவில்லை. இரண்டு பக்கங்களில் ஓர் அதிகாரம் ஒரே பார்வையில் பார்க்குமாறு அமைக்கப்பெற்றது. குறளின் முதல் அடி நான்கு சீர்களையும்இரண்டிரண்டு சீர்களாக இரண்டு வரிகளும், இரண்டாம் அடியிலுள்ள மூன்று சீர்களை ஓரடியாகவும் மூன்றடிகளில் அமைக்கப்பெற்றது. இதுவே, பொதுமக்களால் "தீப்பெட்டிக்குறள்" என்று என்று உவமைக் கண்கொண்டு சொல்வும் பெற்றது. அதனைப் பையில் வைத்துக் கொண்டு போவாரிடம் பெருவேட்கைப் பஐகக் குடியர்கள் 'தீப்பெட்டி கொடுங்கள்' என்று கேட்டு நாணமுற்ற நிகழ்ச்சிகளும் உண்டு. குறியருள் மிகக் குறியரைத் தீரக்குறியர் என்பதுபோலக் குறள்களுள் இது தீரக் குறள் என்பது சாலும்!

திருக்குறள் பரிமேலழகர் உரை 1937 இல் வெளிவந்தது. அதன் பரிசுப் பதிப்பு மேலைநாட்டுக் கிறித்துவ மறைநூல்