பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

30

219

பேட்டையில் அமைந்துள்ள மர்மலாங் காலம் மறைமலை யடிகள் பாலமென விளங்கியதும், சுற்றுலாக் காட்சியிடங்களுள் மறைமலையடிகள் கலை மன்றம் இடம் பெற்றதும் ஆகும்.

'அடிகளார்க்குச் சிலை எழுப்ப வேண்டும்; அதனை இந்த இடத்தே எழுப்பவேண்டும்; அதன் அமைப்பும் சூழலும் இவ்வாறு இருத்தல் வேண்டும்" என்று மாநகராட்சிக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுப்பார் வ.சு. அடிகளார் பெயரால் கல்லூரி வேண்டும்; தனித்தமிழ் ஆய்வுத் திணைக்களம் வேண்டும்; நகர்க்கு அடிகளார் பெயர்சூட்ட வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்துவார்;

செந்தமிழ்ச் செல்வியாம் முரசம் வழியே ஒலியெழுப்புவார். பயன் என்ன? சென்னையிலோ அடிகளார்க்குச் சிலை; அடிகளார் தோன்றிய நாகையிலே சிலை; மதுரையிலே மாநகராட்சி உயர்பள்ளிக்கு அடிகளார் பெயர் - இன்னவெல்லா ஆங்காங் குள்ளாரால் தோற்று விக்கப்பெறுகின்றன; புகழ்பாடுகின்றன.

ஒரு நூறாயிரம் மக்கள் எல்லா வாய்ப்புகளுடனும் வாழும் வகையில் குடியிருப்பு, தொழில்துறை, வணிகத்துறை, கல்விக் கூடங்கள், கலைக்கூடங்கள் மருத்துவ விடுதிகள், சிற்றுண்டிச் சாலைகள், கலைக்கூடக்ஙள் மருத்துவ விடுதிகள், சிற்றுண்டிச் சாலைகள், கூட்டுறவு வணிக நிலையங்கள், பேருந்து நிலையங்கள் இன்பிற வாய்ப்புகள் நிரம்பியதாய்ச் சென்னைக்கும் செங்கற் பட்டுக்கும் இடையேயுள்ள காட்டாங் குளத்தூரில் மறைமலை நகர் உருவாகி வருகின்றது. ஆங்கே கழக ஆட்சியாளர் திரு.வ.சு. பங்கு என்ன? அங்கேயும் மறைமலை பெயர் விளங்கச் சீரியதோர் நூல் நிலையம் எழுப்பி அங்கு வாழ்வார்க்குக் கலைச் செல்வங் களை வாரி வழங்கப் போகின்றார்!

மறைமலைக்கு ஆண்டுதோறும் விழா, அணிமிக்கவிழா! பெரும் புலமையாளர் பங்கு - இவையெல்லாம் தட்டின்றி நடத்தி வரும் வ.சு. வை மறைமலை மருகர் என்பது எவ்வளவு பொருத்தம்!