பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

221

நூல்நிலையம் பயன்படுதலைச் பொறுத்துத்தானே அதன் வெற்றியுள்ளது? ஆகலின் அப் பயன் இயல்பாய் அமையுமாறு தமிழ்ப் புலவர்கல்லூரி ஒன்று தொடங்கினார். அக் கல்லூரிக்கு எவர் பெயரைச் சூட்டுவது? 'புலவர்' எனின், அவர் திருவள்ளுவரே என்பது திருவள்ளுவமாலை. ஆகலின், அதனைத் திருவள்ளுவர் செந்தமிழ்க் கல்லூரி என நிலைநாட்டினார்.

நாட்டின் நலம் இளையோர் வாழ்வைப் பொறுத்தே அமைகின்றது என்பது எவரும்அறிந்ததே. ஆதலால் குழந்தைக் கல்விக்குத் தம்மால் கூடும் தொண்டு செய்தல் வேண்டுமெனக் குறிக்கொண்டார் வ.சு., அதனால் கிளர்ந்தது குமரகுருபரர் குழந்தை வளர்ப்புப் பள்ளி. ஐந்தாம் அகவையிலே கந்தர் கலிவெண்பாப் பாடிக் குமரனை வழிபட்ட அக் குமரகுருபரர் பெயரில் குழந்தைகள் பள்ளி - மழலையர்பள்ளி - அமைத்தது எத்தகைய நுண்தேர்ச்சி!

மகளிர், கல்வியும் தொழில் தேர்ச்சியும் பெறுதலே நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்னும் சீர்த்தியை நல்கும் என்பதைத் தேர்ந்தவர் திரு.வ.சு. ஆதலால், மகளிர்க்குத் தையல் பயிற்சிப் பள்ளி தொடங்கினார். அதற்கு எப்பெயர் சூட்டுவது? தம் தவப்பெருந் தந்தையார்க்கே தனித்தமிழ்த்தந்தையாம் பேற்றை அருளிய தமிழ்த்தாயின் தவமகள் - திருவரங்க நீலாம்பியைர் பெயரைச் சூட்டினார். இப்போது அது 'நீலாம்பிகையார் பல்துறைப் பயிற்சிப் பள்ளி' யாக நடைபெறுகின்றது.

உயர் தமிழ் மாண்பை உலகம் அறிய வேண்டுமானால் அருந் தமிழ் நூல்களை ஆங்கில ஆக்கம் செய்தல் வேண்டும் என்னும் ஏரார்ந்த எழுச்சியால் ஒரு மன்றம் தொடங்கினார். திரு.வ.சு. அம் மன்றத்திற்குக் 'கா.சு. பிள்ளை ஆராய்ச்சி மன்றம்' என் பெயர் சூட்டினார். கழகத்தின் முதற்பெரும் பேராசிரியர், தாகூர் சட்டக்கல்விப் பெரும்பரிசாளர், ஆங்கிலும்அருந்தமிழும் அமைந்த தேர்ச்சியர் கா.சு. அவர் பெயர்த்தகுதிக்கு வேறு என்ன வேண்டும்!

கழக அமைப்புமுறைச் சேமிப்பால் அறம் வளர் பணியில் கழகம் ஈடுபட்டு நாடு நலம் பேணியது. ஆனால், "இன்று வந்துவிட்டதோர் இடையூறு மீனவன் ஆணையாலே" என்பது போல் வருமானவரித் துறையாரால் அறநிறுவனச் செயல்கள் அனைத்தும் ஆட்டம் கொடுக்கத் தொடங்கின.