பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




228

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

குன்றா இளமை எழிலுடன் புதுப்புது அணிகளும் புனைந்து 'பொலிவோடு' விளங்கிவருகின்றாள்.

செந்தமிழ்ச்செல்வி தோன்றுதற்கு முன்னரே அழகு நடை செய்தது செந்தமிழ். அது செல்வி பிறப்பதற்கு இருபத்தோர் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி வளர்ச்சி நிலையில் திகழ்ந்தது. செல்வி தோன்றிய ஈராண்டுகளுக்குப் பின்னே பிறந்தது தமிழ்ப் பொழில்! செந்தமிழுக்கும் தமிழ்ப்பொழிலுக்கும் நடுப்பிள்ளை யாய்க் கிளர்ந்தாள் நல்ல செல்வி.

செந்தமிழ் நாற்பது யாண்டுகள் நயத்தகு நடை செய்தான். 'நாற்பதில் நழுவல்' 'ஐம்பதில் அசதி’ ‘அறுபதில் ஆட்டம்' என மாந்தர் வாணாள் முறைப்படி அமையலானாள். இடையிடை நின்றும் வந்தும் உலவினாள். முத்திங்கள் இதழாக இப்பொழுது முறை கொண்டுவிட்டது.

தமிழ்ப்பொழில் வெளியீடு அதன் மூன்றாம் துணரிலேயே, பொழிலின் வெளியீடுகள் தாழ்த்து வெளிவருவதற்குரியவை 1. போதிய அளவு கட்டுரைகள் வேண்டும் காலத்தின்மை. 2. பொழில் வெளியீட்டிற்கென்றே முழுநேரமும் செலவிடத் தக்க தொண்டரின்மை என்னும் இசைகளேயாம்” என்னும் செய்தியுள்ளது. "மேற்கூறிய குறைகள் இரண்டும் இவ்வாண்டில் எய்துதற்கு இடமில்லைஎன்பது ஒருதலை" என்னும் உறுதியும் அதிலேயே உள்ளது. ஆனால் அதன் 2, 3 மலர்களும் 4, 5 மலர்களும் 6, 7, 8 மலர்களும் 9 - 12 மலர்களும் சேர்ந்து சேர்ந்து ஓரிதழாக வெளிப்பட்டனவே யன்றி 'மாதிகை' யாக வந்தில்.

இவற்றால் தமிழ் வாழ்வையே தம் வாழ்வாகக் கொண்டு இயங்கும் இதழ்களுக்கு ஏற்படும் நோய்களையும் தடைநிலை களையும் உணரமுடியும். இச் சீர்கேடாம் நிலையிலும் தன் 55 ஆம் சிலம்பு செவ்விதின் இசையொலி எழுப்ப இயலுகின்றாள் செல்வி எனின், அதற்குப் பொறுப்பாசிரயராகிய திரு.வ.சு. அவர்களின் திறமும், கழக அமைப்பின் அருமையுமே என்பது விளங்கும்.

செந்தமிழைத் தொடங்கியது மதுரைத் தமிழ்ச் சங்கம்; அதன் தலைவர் பாலவனத்தம் குறுநிலமன்னர் பாண்டித்துரைத் தேவர். இதழாசிரியர் இரா. இராகவ ஐயங்கார்; மதுரைத் தமிழ்ச்சங்கச்சார்பிலே 'சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை'