பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




230

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

பாடலுக்குப் பின்னே தமிழ்ப்ப்வுலமை வரலாறு தொடங்குகிறது. திருநான்மறை விளக்கம், மேல்நாட்டுத் தத்துவ ஆராய்ச்சி வரலாற்றின் சுருக்கம், நீதிவிளக்கம், திருமுருகாற்றுப்படை யாராய்ச்சி ஆகியவற்றுடன் இததுழ நிறைகின்றது. தமிழ் ஒருகண்ணும் சைவம் மற்றொரு கண்ணுமாக விளங்கும். என்று இதழாசிரியர்கூறுவதை முதல் இதழே மெய்ப்பிக்கின்றது. ஓவியங்களும் மதிப்புரைகளும் முதல் சிலம்பிலேயே பங்கு கொடு விடுகின்றன. முதல்சிலம்பிலேயே, சென்னைச் சர்வ கலாசாலை சீர்திருத்தம், வித்துவான் பரீட்சை, பண்டிதர்கட்குப் பேதனை பண்டிதர்களின் நிலைமை நாணயங்கள், இத்து மத தர்ம போதனை, ( பண்டிதர்களின் நிலைமை, நாணயங்கள், இந்துமத தர்ம பாதுகாப்பு மசோதா, சிக்கனம் அம்மைகுத்தல், வேளாளர் சங்கம், தமிழர் சங்கம், திருக்கோயில் சீர்த்திருத்தம், வேளாளார் சங்கம், தமிழர் சங்கம், திருக்கோயில் சீர்த்திருத்தம், வேளாளர் கல்வி அபிவிருத்தி சங்கம், சாத்தூர் தமிழ்ச சங்கம், தூத்துக்குடி சைவ சித்தாத் சபை ஆகியவை பற்றிய சித்தாந்த சபை ஆகியவை பற்றிய குறிப்புகளும் சான்றோர் சிலர் மறைவுக்கு இரங்கல்களும் வெளிவந்துள்ளன. இக் குறிப்புகளால் செல்வியின் இனிய தொண்டுள்ளம் நன்கு வெளிப்படுகிறது.

குறிப்பாக, புலவர்களுக்கு வித்துவான் தேர்வு வேண்டும் என்றும், பண்டி.தப் பயிற்சி வேண்டும் என்றும், அவர்கள் ஊதியம் உயர்தல் வேண்டும் என்றும் ஒலிக்கிறது. அரசு வெளியிட்ட ஓரணா, இரண்டணா நாணயங்களில் தமிழ் தவிரமற்றெல்லா முதன்மையான பொழிகளும் காணப்படு கின்றன. அரசியலார் தமிழ்மொழியை நாணங்களில் சேர்க்காமல் இருப்பது சிறிதும் பொருத்தமாகத் தோன்றவில்லை' என்று முறையிடுகின்றது.

செல்வியின் ஓராண்டு நிறைவை இதழாசிரியர் இனிதின் உரைக்கிறார். "நமது செல்வி காலத்தாழ்வு என்னும் பேய் பிடியாமலும் கைப்பொருளின்மை என்னும் பறவை பறவாமலும் எடுப்பார் யீபடிப்பார் இலரென்னும் இலம்பாடு மேவாமலும் செழுங்குடிப்பிறந்த செல்வப்பாவையாய்ச் சிறந்து ஓராட்டைப் பருவம் உற்றனள். செல்வர் பலரும் அவளுக்கு அடியுறையாகிய அரும்பொருளை அயிர்ப்பின்றி வழங்கினர். புலவர் பலரும் தந்தம் தகுதிக்கு ஏற்பப் பிள்ளைப் பணியணிந்து கொள்ளை மகிழ்வு கொண்டனர். செல்வியும் மழலை மொழிந்து சான்றோர்