பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு “கலைப்பொருட்டால்வாங்கா துலகெனின் யாரும் விலைப்பொருட்டால்நூல்தருவார்இல்"

233

என்னும் குறள் போலிகை ஒன்று இக் கட்டுரையில் சுடர்கின்றது. புலவர் வரலாறு - படிக்காசுப் புலவர் சடங்குகள், திருக்கோயில் களில் அரிவையர் ஆடல், மாணவர்களுக்கோர் அறிவுரை என்னும் கட்டுரைகள் தொடுத்துக் காணப்பெறுகின்றன. (176-91)

தமிழ் அறிவியற் சொற்கள் குறித்த திரு.பா. வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் சொற்பொழிவுச் சுருக்கம் ஒன்றும் இத் தொகுதியில் திரு.வ.சு. எழுதியுள்ளார். 'ரேடியம்' என்பதைக் 'கதிரி' எனத் திறமாக விளக்கிப் பெயரிட்டுள்ளார்:

“ரேடியம் (Radium) என்ற இருட்டிலும் ஒளிகாட்டும் பொருள் சில ஆண்டுகளுக்கு முன்னர்த்தான் ஐரோப்பிய நாட்ல் கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு முன் ரேடியம் என்ற ஒரு சொல் இருந்தது இல்லை. ஆனால், ரேடியேட் (Radiate) (மின்னு) என்ற சொல் இருந்தது. அதிலிருந்து (That which Radiats)ட மின்னும் தன்மையுடையது ரேடியம் என்று அதற்குப் பெயர் கொடுத்தார்கள். அது போல் நாம் கதிர் (ஒளி) என்ற சொல்லைக் 'கதிரி' என இகரவிகுதி கொடுத்து ரேடியம் என்னும் ஆங்கிலச் சொல்லைத் தமிழ்ப்படுத்தலாம். இப்படியே எல்லா அறிவியற் சொற்களையும் தூய தமிழாக்கலாம். இரவல் பெறுமாறு வறுமையுடைய மொழியன்று நமது உயர்மொழியம் தமிழ்மொழி.”

தம் இருபத்தைந்தாம் அகவையிலேயே செந்தமிழ்ச் செல்வியின் பதிப்பாசிரியப் பொறுப்பினை ஏற்றுச் செவ்விதில் புலவர் புகழுக்கு இடமாகப் போற்றி வளர்த்தார். முப்பதாம் அகவையில் திறமான கட்டுரைகளையும் அறிவுரைகளையும் மொழிபெயர்ப்புகளையும் மொழி வளர்ச்சி முறைகளையும் தாமே செய்ய முனைப்புடன் ஈடுபடுவதுடன் பிறரும் செய்விக்குமாறு அறிவுறுத்துகிறார். (சிலம்பு 5) இதன் வளர்ச்சி செல்வியின் 47 ஆம் சிலம்பிலே இவர்தம் 75 ஆம் அகவையிலே வெள்ளமெனப் பெருகுகின்றது. வளரும் தமிழை வளர்ப்பது எப்படி? என்று மொழிநலத்துக்கு ஆகும் முழுத்த கடமைகளை யெல்லாம் முனைப்பாக ஆய்ந்து முழக்குகிறார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பட்டறிவால் தெளிந்து பறையறை கின்றார்.