பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

237

திரு. கா. சு. பிள்ளைக்கு என்னென்ன உதவிகள் செய்யவேண்டும் என்று கருதுகிறீரோ அத்தனைக்கும் நான் ஒப்பம் பாடுகிறேன் என்று கனிந்துருகிக் கூறினார் சிதம்பரனார்.

திரு.வ. சு. அவர்கள் 'ஔவை' அவர்களுக்குக் கா.சு. அவங்களைத் தொடர்வண்டியில் முதல் வகுப்பில் ஏற்றித் தக்க துணையோடு நெல்லைக்கு அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதித் தொலைவரைவுச் செய்தியும் விடுத்தார். அவ்வண்ணமே கா.சு. அவர்கள் நெல்லைக்கு வர, நெல்லைச் சந்திப்பிலே இருந்து வரவேற்றுக் கழக நிலையத்தில் தக்க வாய்ப்புடன் தங்குதற்கு ஏற்பாடு செய்தார். அவர்க்கு உதவி செய்தற்குப் பணியாள்கள் இருவர் அமர்த்தப் பெற்றனர். நோய்க்கூறு அறிந்து மருந்து கொடுத்தற்கும் மருத்துவரை ஏற்பாடு செய்தார். ஏறத்தாழப் பத்துத்திங்கள் செய்துவந்த மருத்துவத்தாலும் பேணிக்காத்த முறையாலும் நோய்நீங்கி நலம்பெறுவதுபோன்ற நிலைமை ஏற்பட்டது. ஆனால், எதிர்பாரா நிலையில் 30-4-45 இல் இயற்கை எய்தினார். அவருக்குச் செய்யவேண்டிய இறுதிக் சடங்குகளை எல்லாம் திரு.வ.சு. அவர்களே முன்னின்று செய்தார். நடுகல் விழாவும் நடாத்தினார். அவர் பெயர் என்றும் விளங்கக் 'காசு’ப் பிள்ளை ஆராய்ச்சி மன்றத்தையும் தோற்றுவிந்தார். புலவரைட் போற்றும் புகழ்மைக்கு இஃதொரு சீரிய சான்றாகும்.

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் பெயரா வைத்துள்ள நாடகப் பரிசுத்திட்டம் டாக்டர் மு.வ. அவர்கள். பெயரால் வைத்துள்ள திருக்குறள் பரிசுத்திட்டம் டாக்டர் தணிகைமணி அவர்கள் பெயரால் வைக்கப்பெற்றுள்ள திருமுறைப் பரிசுத் திட்டம் ஆகியன புலவரைப் போற்றும் புகழ்மைகளே!

1961 இல் நடைபெற்ற கழகத்தின் 1008 ஆவது நூல் வெளியீட்டு விழாவின்போது வெள்ளியில் சமைக்கப்பெற்ற அம்பல வாணர் திருவுருவம் கழக நூலாசிரியர் புலவர் இளவழகனார், சித்தாந்த பண்டிதர் ப. இராமநாத பிள்ளை, புலவர் அரசு, பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், திரு. சிவசைலம்பிள்ளை, கருப்பக்கிளர்சு. அ. இராமசாமிப் புலவர் ஆகிய எழுவர்க்கும் வழங்கிப் பொன்னாடை போர்த்திப் பாராட்டியதும்,