பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு க

241

தானே! ஆனால் புலவரைப் போற்றுதல் தம் உயிர்ப்பான கொள்கைக்கு ஊறு விளைப்பதாக இருப்பின் அப் போற்றிப் புரந்ததற்கு வருந்தித் தம் கருத்தை மாறறிக்கொள்ளும் ஆற்றலும் வ.சு. அவர்களுக்கு உண்டு.

6

அருட்கவி சேதுராமனுக்கு எவ்வளவு விளம்பரம் செல்வியில்! அவர் படைப்புக்கு எத்துணைப் பாராட்டுகள்! எத்துணைத் திருக்கோயில்களுக்கு அழைத்துச் செல்லுதல்! ஆனால் என்ன? அவர் தனித்தமிழ்க் கொள்கையை உதறினார்; அக் கொள்கையை மறுக்கவும் தொடங்கினார். அவரை மேலும் போற்றுவதோ தமக்குத் தகவு? நேரேயே மறுத்தெழுதி அமைந்தார்! மனத்திற்றோன்றியதை மறைப்பதும், மனமறிந்து பொருந்தாக் கூட்டைப் பொருந்தி வாழ்வதும்புலவரைப் போற்றுதலாகது என்பதே வ.சு.வின் புகழ்நெறி! இந் நெறியை என்றும் எந் நிலையிலும் அவர் தவறவிட்டதே இல்லை! இது மறைமலையாராம் புகழ்ப் புலவரைப் போற்றுதல் தானே!