பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




248

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

போர்த்திப் புகழ்மாலை சூட்டப்பெற்றன. அவற்றுள், தமிழக அரசுத் தலைமைச்செயலக முத்தமிழ் மன்றம், தமிழ்வட்டம், சைவவேளாளர் பேரவை, தூத்துககுடி சைவ சித்தாந்த சபை, திருநெல்வேலி நெல்லையன்பர்கள் கழகம், அருணகிரி இசைக் கழகம், திருவள்ளுவர் கழகம், திருவாமாத்தூர் முருகதாசர் செந்தமிழ்க்கழகம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

குடியரசுத் தலைவரவர்கள் வழங்கிய பாராட்டிதழில் காணும்ஆங்கிலச் செய்தியின் தமிழாக்கம் வருமாறு :

பத்மஸ்ரீ

திரு. வயிரமுத்துப் பிள்ளை

சுப்பையா பிள்ளை

திரு.வ.சுப்பையாபிள்ளை (71) தமிழ்மொழி வளர்ச்சிக் காகச் சிறந்த தொண்டு செய்து புகழ்பெற்ற பதிப்பாளர் ஆவர். பண்டைத்தமிழ் இலக்கியங்களைக் கற்பதற்கு அவர் ஆற்றிய தொண்டு மிகவும் போற்றுதற்குரியது. திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்தநூற்பதிப்புக் கழக மட்டிப்பின் சென்னைக் கிளை நிலையத்தின் முகவராக 1921 பதிப்புத் துறையில் அவர் தமது பணியைத் தொடங்கினார். பின்னர் அதன் அமைச்சராகி இப்போது அதன் ஆட்சியாளராக இருக்கின்றார். பொதுமக்களிடையே பண்டைத்தமிழ் இலக்கியங் ளை மக்கள் விரும்பத்தக்க பதிப்புக்களாகக் கொண்டு வருவதற்கு அவரே காரணராவார். வெளிநாட்டு அறிஞர்களுக்கும் ஆங்கிலம் பேசும் உலக மக்களுக்கும் தமிழ்மொழி தமிழ் இலக்கியங்களின் வளத்தையும் செல்வத்தையும் அறிமுகப்படுத்தும் வகையில் ஜி.யு. போப் துரைமகனார் ஆங்கில ஆக்கஞ்செய்த திருக்குறள் நாலடியார் ஆகிய இரண்டு நூல்களையும் சங்க இலக்கிய இன்கவித்திரட்டு, நீதிநூற்பத்து ஆகிய நூல்களையும் சிறந்த முறையில் பதித்து வெளியிட்டு உள்ளனர். ஜேம்ஸ் ஆலன் எழுதிய சிலஅரிய நூல்களைத் தமிழாக்கஞ் செய்து வெளியிட் டிருப்பதோடு சட்ட வல்லுநர் சிலர் உதவிகொண்டு சட்டவியல், தீங்கியல் சட்டம், சட்டமன்ற நடைமுறை ஆகிய நூல்களை வெளியிடுவதற்கு அவரே பொறுப்பாளராவார்.

'திரு. பிள்ளை அவர்கள் தாமே சில நூல்களுக்கு ஆசிரியராவார். குழந்தைகட்கான நூல்களை முதன்முதலில் வெளிக்கொணர்ந்து அத் துறையில் முந்நூறுக்கு மேற்பட்ட நூல்களை அழகுற அச்சிட்டு வெளியிட்ட பெருமை அவருக்கே