பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




250

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

வரும் சைவத்திருவாளர் திரு. தி.சு. விசுவநாதபிள்ளை பி.ஏ. அவர்கட்கு எனது தலைதாழ்ந்த வணக்கம்.

"பின்னர்த் தனித்தமிழ் நெறியில் உறைத்துநின்று பதிப்புத் துறையில் பணியாற்றுவதற்கு வழிவகுத்துககாட்டிய மறைத்திரு மறைமலையடிகளார் திருவடிகட்கு என் நெஞ்சார்ந்த வணக்கம்.

அடுத்துப் பல துறைகளில் நூல்களை யான் விரும்பிய வண்ணம் ஆக்கியுதவிப் புகழ் விளைத்துவரும் கழக நூலாசிரியர் பெருமக்கட்கெல்லாம் எனது உளமிகு நன்றி தெரிவிக்கின்றேன். வினையாற்றுந் தகுதியறிந்து யான் கழக நலத்துக்கு ஆற்றிவரும் பணிக்கு உறுதுணை நல்கி ஊக்கமூட்டிவரும் கழகச் செயற்குழு உறுப்பினர்கட்கு மிகவும் கடப்பாடுடையேன்."

தாமரைத்திரு அல்லது தாமரைச் செல்வம் என்னும் பட்டம் நடுவண் அரசால் அறிவிக்கப்பெற்றதும் மகிழ்வு கூர்ந்த அன்பர்களும் நண்பர்களும் ஆங்காங்கு விழாவெடுத்துப் பாராட்ட விழைத்தனர். அஞ்சல் வழியாகவும், தொலைவரிச் செய்தியாகவும் வாழ்த்துத் தெரிவித்தும் மகிழ்ந்தனர்.

"தாங்கள் அடைந்துள்ள மேன்னைமயும் முன்னேற்றமும் தமிழ்மகன் ஒவ்வொருவனையும் விம்திதமும் பெருமையும் கொண்டு வீறுநடை போடச் செய்யும்."

"தமிழ்த் தாய்க்கு நேரும் ஆபத்துகளைத் தலைமையேற்றுப் போர் நடாத்தித் தவிரித்தும் தகர்த்தும் தந்நிகரில் வெற்றி பெற்று வாகைமாலை சூடிச் செருக்கு நடைபோடும் வீரத் தளபதியர் ஒரு லருள்ளும் தாங்கள் ஓங்கியுயர்ந்த ஒருவர்.'

தாங்கள் இதுவரை ஆற்றியுள்ள அழிவற்ற அரும்பணிக்காகத் தங்கட்குப் பொற்சிலை ஒன்று எடுத்தாலும் பொருந்தும் என்று அனைவரும் பொங்கு மகிழ்வுடன் கூறுவர்.

"வெளிநாடுகளில் இனி அமையும் உலகத்தமிழ் மாநாடு களிலும் தாங்கள் வரவேற்கப்பெற்று, ஓர் உயர்ந்த உலகப் பட்டமும் அடைவதற்குரியது தங்கள் அரிய தொண்டு.'

இவ்வாறெல்லாம் மகிழ்ந்தெழுதிப் பாராட்டினர். 1-3-69 இல் தமிழ் வட்டச் சார்பில் தாமரைத் திரு.வ.சு. அவர்களுக்கு உட்லண்சு விடுதியில் ஒரு பாராட்டு விழா நிகழ்ந்தது.

தாமரைத்திருவின் தனிப்பெருமையைச் சங்கநிதி பதுமநிதி இரண்டும் என்னும் தேவாரத் திருப்பாடல் காட்டும். அத் தாமரைத்திரு முதலாம் சிறப்புகளைப் பெற்றும், இந்தியத்