பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என்பது.

கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

253

திருவாமாத்தூர் முருகதாசர் செந்தமிழ்க் கழகச் சார்பில் 6-6-69 இல் ஒரு பாராட்டுவிழா நிகழ்ந்தது. புலவர் திரு. தி.மு. சங்கரலிங்கம் வரவேற்றார். சிரவணபுரம் கௌமார மடாலயத் தலைவர் தவத்திரு சுந்தர சுவாமிகள் தலைமை தாங்கிப் பொன்னாடையும் போர்த்தினார். புலவர் ந. ஆறுமுகம், திரு தி.சே. சாமிநாதபிள்ளை, கெளமார மடாலயத் தலைவர் திரு.தி.செ. முருகதாச ஐயா ஆகியோர் வ.சு. அவர்களின் செம்பணி குறித்துப் பாராட்டினர். விழா எடுத்தவர்களுக்கு உள்ார்ந்த நன்றி தெரிவித்து உவகை கூர்ந்தார் திரு.வ.சு.

நெல்லைத் தமிழினத்தமிழ் இலக்கியக் கழகச் சார்பில் 7- 9-69 இல் பாளையங்கோட்டை சைவ சபையில் பாராட்டு விழா எடுக்கப்பெற்றது. கழகச் செயலர் ஆதி. சீனிவாசன் வரவேற்றார். பாவலர் இரா. சு. முத்து வாழ்த்துப்பா வழங்கினார். திரு.சி.சு. மணி பொன்னாடை போர்த்தினார். திருவாளர்கள் ந. சொக்கலிங்கம், சு. மாமன்னன், கா.ப. அருணாசலம், சி.சு. மணி ஆகியோர் பாராட்டுரைக்க மறுமொழி யுரைத்தார்திரு.வ.சு.

பேராசிரியர் ஆர். சனார்த்தனம் நாயுடு அவர்கள் மறைமைலையடிகள் நூல்நிலையத்தில்30 சொற்பொழிவுக ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். அதன் நிறைவு விழாவும், வ. அவர்கள் தாமரைச் செல்வம் பெற்றதற்குப் பாராட்டு விழாவுமா 6-10-69 இல் முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்தது. விழாத் தலைமை தாமரைச்செல்வர். நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் ஏற்றார். திரு. சி. செயராமன் வரவேற்றார். திரு. வேங்கடசாமி நாயுடு, திரு.சு. சங்கரராசு நாயுடு, திரு. அ.மு. பரமசிவானந்தம், திரு. எம்.எம்.பட் ஆகியோர் பணிநலமும் உரைநலமும் பாராட்டினர். விழாக்கொண்ட பெருமக்கள் நன்றியுரைத்தனர்.

தமிழக அரசு தமிழ்ச் சான்றோர்களில் சிறந்தார்க்குப் பட்டம் வழங்கிப் பாராட்ட விழைந்தது. அதனால் 15-1-79 இல் வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ந்த திருவள்ளுவர் விழாவின் போது தமிழுக்குச் சீரிய தொண்டு செய்துவரும் பெருமக்கள் திரு. தி.சு. அவினாசிலிங்கம், மொழிஞாயிறு திரு. ஞா தேவநேயபாவாணர். பன்மொழிப்புலவர் திரு.கா. அப்பாத்துரை, இசைப்பேரறிஞர்திரு. ம.ப. பெரியசாமித்தூரன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் திரு.வ. சுப்பையா ஆகிய ஐவரையும் தேர்ந்து செந்தமிழ்ச் செல்வர் என்னும் பட்டம்