பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




258

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

சிறப்புமாக நடைபெற்றது. நெல்லை சிவத்திரு. இராமலிங்க தேசிகர் சடங்குகளை முறையாக நடாத்தி முத்து விழாச் செல்வர்களுக்குச் சிவதீக்கையும் செய்து வைத்தார்.

சடங்குகள் அனைத்தும் தமிழ்முறைப்படியும், சிவாகம நெறிப்படியும் திருமுறை தமிழ்மறை இசைப்பாடல்களுடனேயே நடைபெற்றன. திருமுறை இசைச் செல்வர்கள் திரு. கூத்தாக, திரு. புண்ணிகோடி ஆகியோர் திருமுறை இசைத்தனர். விழாவை ஒட்டி மாலைப் பொழுதில் நிகழ்ந்த வரவேற்பின் போதும் இவர்களின் இன்னிசை நடைபெற்றது.

விழாவில் உற்றார் உறவினர்களும், அறிஞர்களும் பெரு மக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். நாடெங்குமுள்ள சிறந்த திருக்கோயில்களில் எல்லாம் சிறப்பு வழிபாடு செய்தற்கு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தன. பல திருக்கோயில்களில்இருந்து திருவருட்பொருள்கள் விழாவிற்குக் கொணர்ந்து வழங்கப் பெற்றன. வாழ்த்துச் செய்திகள் நிரம்ப வந்தன. செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 56, பரல் 2 “கழக ஆட்சியாளர் வ. சுப்பையா பிள்ளை முத்து விழாச் சிறப்புமலர்" என்னும் பெயரோடு வெளிப்பட்டது.