பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

261

முன்னேற்றத்தில் பங்குகொண்டு உதவுதலிலும், ஆர்வம் காட்டிவருகிறார். மீண்டும் பெறவேண்டும் என்று கருதாமலே எனக்கு வேண்டும் போதெல்லாம் வேண்டும் தொகையைத் தட்டாமல் வழங்கியுள்ளார். என்மேல் கொண்ட பற்றில் எள்ளளவும் குறையாமல் என்மக்கள் பாலும் பேரன்பு கொண்டு ள்ளார். இளமைதொட்டே அவர் செய்துள்ள உதவிகள் நினைக்க இன்பமானவை. அத்தகைய பெருந்தகையர் அரியர். அவர் உறவால் யான் என் வாழ்வில் அடைந்துள்ள - அடைந்து வருகிற பேறுகள் மிகப்பல" என்கிறார் வ.சு. அவர்களின் உடன்பிறந்த குப்பம்மாள் அவர்கள் தம் ஒரே அன்புச் செல்வர் திரு.ச திருஞானம்பிள்ளை. நெஞ்சார்ந்த இம்மொழி சுற்றந் தழுவ பெருங்குணத்திற்குச் சீரிய எடுத்துக் காட்டாகும்.

அயராமுயற்சி

தாமரைச்செல்வர் திரு.வ.சு. அறியாதது மடிமை என்னும் சோம்பல்! 'மடிமை குடிமையைக் கெடுக்கும்.' எத்தகைய வளமும் வாய்ப்பும் இருப்பினும் மடிமையுடையார்மாண்புறார்' என்பதை அழுத்தமாக உணர்ந்தவர் திரு.வ.சு. படிப்பு நாளிலும் முயற்சி! பணியில் புகுந்த நாளிலும் முயற்சி! தமக்குப் பவள விழாக்கண்ட நாளிலும் முயற்சி! அயரா முயற்சி! 'நாற்பதில் நழுவல்' என்பதை நழுவச்செய்தவர் திரு.வ.சு. 'ஐம்பதில் அசதி’ என்பதை அயரச் செய்தவர் திரு.வ.சு., அறுபதில் ஆட்டம் என்பதை ஆட்டமுறக் கண்டவர் திரு.வ.சு., எண்பதில்தூக்கம் என்பதைத் தூக்கத்திற்கு அனுப்பிய தோன்றல் திரு.டவ.சு.

நூல்களை விற்பதற்காக ஊர் ஊராகச் சுற்றிய நாள் உண்டு. பேருந்துநிலையம், தொடர்வண்டி நிலையம் ஆகியவற்றிலேயே படுத்துக் கண்ணர்ந்த நாள் உண்டு! வேண்டிய ஒருவர் திண்ணையிலே படுத்துக்கொண்டே, வளர்ச்சித் திட்டங்களைப் போட்டுக் கிளர்ச்சியாகப் பணியாற்றிய நிகழ்ச்சிகள் உண்டு. ஓய்வற்ற வேலைக்கு இடையே என்னைப்பார்த்து இதனைப் வைக்கவேண்டும் என்று சொல்ல வரவேண்டுமா? இருந்தன் மையால் பல நல்லோர் கேட்க நடந்ததுண்டு. ஏறித்தெருத் தெருவாக நூல்விற்ற காலமும் முயற்சிக்கு அணுவளவும் குறையாமல் இன்றும் திகழும் பெருமையும் உண்டு. 'நீங்கள் அழைத்திருக்கலாமே! மூன்றாம் மாடிக்கு ஏறிவர வேண்டுமா? என்று வினாவுவார்க்கு, 'முடிந்ததால் தானே வருகிறேன்' என்று சொல்லிச் சொன்னவரைத் திணறவைத்த அயரா முயற்சியும் உண்டு.