பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

269

ஏற்றுக்கொண்டிருந்தார். அறிவியல் பெருமக்களாகிய என்றி போர்டு, தாமசு ஆல்வா எடிசன், லூதர் பர்பாங்கு ஆகிய மூவர் திருவுருவப் படங்களையும் வாழ்த்திதழில் வளைய அமைத்து, அவற்றின் நடுவே நாயுடுவின் திருவுருவப் படத்தை வரையச் செய்திருந்தார். "இம் முப்போரறிஞர்களின் மூளைக் கூர்ப்பும் ஒருங்கே பெற்ற பெருமகனார் இவர்" என்னும் பாராட்டு மொழியை வாழ்த்திதழில் பொறிப்பித்திருந்தார். விழாத் தலைவரான அண்ணா, விழா நாயகர் நாயுடு, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதர் முதலிய பெருமக்கள் அனைவரும் வாழ்த்திதழ் அமைப்பைப் பெரிதும் போற்றினர். வ.சு. தேர்ந்து செய்யும் திறத்திற்கு ஈதொரு சான்று.

எதிரதுபோற்றும் ஏற்றம்

தமிழ்நாட்டில் ஆட்சிமொழி தமிழாகவே இருத்தல் வேண்டும். பயிற்றுமொழியும், சட்டமன்ற மொழியும், பிற பிறவும் தமிழாகவே இருத்தல் வேண்டும் என்னும் எண்ணம் நாட்டில்உருவாகாத நாளிலேயே உணர்ந்து உருப்படியான பணி செய்தவர் திரு.வ.சு.

ஆட்சிமொழிக்காவலர் திரு. கீ. இராமலிங்கனார் துணை கொண்டு நாடு உரிமை பெறுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே - ஆட்சிச்சொல் அகரவரிசை, நகராட்சிமுறை ஆகிய நூல்களை வெளியிட்டார்.

ஓய்வுபெற்ற மாவட்டப் பதிவாளர் திரு.செ. முத்துவீராசாமி நாயுடுவைக் கொண்டு “ஆவணங்களும் பதிவு முறையும்" என்னும் நூலை எழுதச்செய்து வெளிப்படுத்தினார்.

சட்டப்பேரறிஞர் திரு.மா. சண்முகசுப்பிரமணியம் அவர் களால் வெளிப்படுத்தப்பட்ட சட்டத்தொடர்பான நூல்கள், தமிழே நீதி மன்ற மொழிகயாக இருத்தல் வேண்டும் என்னும் உந்துதலால் ஏற்பட்ட படைப்புகள் ஆகும்.

"அறிவியற் கலைகள் தாய்மொழியில் பயிற்றப்பெற்றால் தான் அது தாய்ப்பால்போல் குழந்தை நலத்திற்குப் பயன்படும். இல்லையேல் புகட்டுப்பால் போலவே என்றும் இருக்கும். பொதுமக்களுக்கும் அறிவியல் ஒட்டுறவாக இராது” என்னும் அழுத்த உணர்வால் அறிவியல் அறிஞர் குழுவை அமைத்து முன்னோடியாக ஆராய்ந்தவர் திரு.வ.சு. அறிவியல் வளர்ச்சி