பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

273

இருக்கவேண்டும்? நம் மொழியில் இல்லாத கலைவளங்களை யெல்லாம் பெறுவதற்கு வாய்ப்பாகவும், உலகெல்லாம்ஒருங்கு தொடர்பு கொள்ளுதற்கு உதவுவதாகவும் இருக்குமானால் நம் மொழிவளமும, நலமும் கருதி, ஏங்றறுக்கொள்ளக்கூடியதாம். இந்நாட்டிலே இருப்பவருள் ஒரு பெரும்பாலர் பேசுகிறார் என்பதற்காக -வடவர் ஆதிக்கம் வலுப்பதற்காக - நம் தலையிலே வெட்டிச்சுமையை வைக்கவேண்டமா?" என்னும் உணர்வு மீக் கூர்ந்தவர் திரு.வ.சு. ஆதலால் தொடக்க முதலே இந்தியை எதிர்த்து வந்துளார். எதிர்ப்பு இயக்கங்களில் பங்கு கொண்டுளார். மூவேந்தர் கொடியைப் படைத்துத் தந்துளார். துண்டு அறிக்கை களும், செய்திக் குறிப்புகளும் அவ்வப்போது வெளியிட்டுள்ளார். ஒரு நூல் வெளியீட்டுக் கழகப் பொறுப்பாளர் இத்தகைய முனைப்பில் இருந்து பணி செய்துள்ள பான்மை இவ்வொருவர் வாழ்விலே காணக்கூடியதேயாகும்.

ஆங்கிலக் கொள்கை

"ஆங்கிலத்தில் நன்றாகப் படிக்கக்கூடிய ஆற்றல் உடைய வர்க்கு அப் பயிற்சியை அழுத்தமாகப் பெறவதற்கு ஆங்கிலவர் களையே ஆசிரியர்களாகக் கொண்டு கற்பிக்கும் மேனிலைக் கல்லூரி ஒன்று கட்டாயம் ஏற்படுத்தவேண்டும். நாட்டில் உள்ள பேரார்வலர்கள் - பெருந்திறனாளர் ஆங்கே பயிற்சி பெகற வேண்டும். அரசின் உதவியால் ஆங்கத் தங்கிப் புலமையை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். அத்தகையவர்கள் தாய்த்தமிழ் மொழியிலும் பற்றும் பயிற்சியும் உடையவராய் விளங்குதல் வேண்டும். இத்தகையவர்களால் தான் தமிழ்மொழி துறைதோறும் ஆக்கம்பெற முடியும். இக் கருத்தில் அரசும் அறிஞர் பெருமக்களும் தலையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆவன செய்ய வேண்டும் என்று தமக்குள்ள ஆர்வத்தை ஆட்சி யாளர் கூறுவார். நோக்குவவெல்லாம் அவையேபோறல் என்பது காதல் துறை! அக் காதல்துறையைக் கன்னித் தமிழ்த் துறைக்குக் கொண்டு வளம்பெறுத்த நினைவு கூர்பவர்திரு.வ.சு. இதனை அறிஞர் உலகம் கருதுமாக! அரசு துணை நிற்குமாக!" தோற்றம்

மிக வளர்த்தி என்றோ குட்டை என்றோ சொல்லமுடியாத அளவிட்ட உயரம்; சிவப்பு என்றோ கருப்பு என்றோ கூறமுடியாத பொதுநிறம்; தடிப்பு என்றோ ஒல்லி என்றோ குறிக்க முடியாத