பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




க கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

289

"தமிழ்ப் புலவர்கள் பலருக்குத் தமிழ் உணர்ச்சி இல்லையே! என்ன ஐயா இவர்கள் படித்த தமிழிடத்தில் பற்றில்லாமல் வாழ்கின்றார்களே! தமிழ் நூல்கள் தமிழ் நூல்கள் பலவற்றை பலவற்றை வாங்க வேண்டாவா? மாணவர்களையெல்லாம் வாங்குமாறு ஊக்கு விக்க வேண்டாவா?" என்று உணர்ச்சி பொங்க உரைப்பார்கள். இது கழகக்காவலர் வேட்கை நிலை கேட்ட ஆர்வலர் ஒருவர்

உரை.

“அச்சுத்தாள் திருத்துவதில் இருந்து நூற்கட்டஞ் செய்தல் வரை ஒவ்வொரு பணியிலும் முழுநிறைவே குறிக்கோளாய் உழைத்து வரும் கழகக்காவலரவர்களைக் கண்டுபேசும் வாய்ப்பினைக் கழிந்த பதினாறாண்டுகளில் பலமுறை பெற்றிருக் கின்றேன். அப்போதெல்லாம் - வேறெப்போதுமே - பெருமைப் பட்டியலையோ, வாணிகப் பேச்சுக்களையோ அவர் விவரிக்க நான் கண்டதில்லை. தமிழின் இன்றைய நிலை என்ன? அன்றைய மேன்மை என்ன? தமிழர் - சிறப்பாகத் தமிழாசிரியர் ஆற்ற வேண்டிய பணிகள் எவை? தமிழ்ப் பகைவர் எவ்வாறெல்லாம் - எங்கெல்லாம் - சூழ்ச்சிகளை - வஞ்சனைகளைப் புரிந்து வருகின்றனர்? மாற்று மருந்தென்ன இப்படித்தான் எங்கள் உரையாடல் வளர்ந்திருக்கின்றது. இல்லை இல்லை, என்னிடம் கழகக்காவல பேசியிருப்பார்கள். செய்து முடித்தவை பற்றி எண்ணாமல் மகிழாமல் - இறும்பூது எய்தாமல், செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து உழைத்து ஆராமை கொள்ளும் செயல்வீரர் கழகக் காவலர் ஒருவரே

இது கழகக்காவலரொடும் அழுந்தி நின்று உறவாடி யுண்மை யுணர்ந்து பறையறைந்த பழையர் ஒருவர் உரை.

“இக்கால இளைஞர்கள் தமிழின் உயர் நிலையையும் உயர் தன்மைகளையும் அறியாது அலைதலைக் குறித்து மிகவும் வாடினார். இந்திய அரசும், தமிழக அரசும், தமிழ் வரலாறு, தமிழ்ப் பண்பாடு ஆகியவை பற்றிய ஆய்வுக்குப் போதிய ஆதரவு தரவில்லை என்று குறிப்பிட்டு எங்களைப் போன்றவர்கள், இந்த உண்மைகளைப் பொதுமக்களுக்கு எடுத்துணர்த்தி அரசினரை நெறிப்படுத்த வேண்டும் என்றும் உரிமையுடன் கேட்டுக் கொண்டார். தமிழ் நலன், தமிழ்ப்பண்பாட்டு வளர்ச்சி முதலிய வற்றுக்கான முயற்சி களைப்பற்றி அவர் விரித்து வந்தபோது அவரது உடம்பில் ஏறியிருந்த முதுமை கழன்று விழுந்துவிட அவரது உடம்பேகூட இளமை கொண்டு நிமிர்வது போல இருந்தது! அவருடைய பேச்சிலே அத்தனை மிடுக்கு! அத்தனை