பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு க

293

(11) மாநாட்டு அறிக்கைகள், வரவேற்புகள், திருக்கோயில் விழா அறிக்கைகள், திருமணம் முதலிய சடங்குகளின் அழைப்புகள் முதலியவற்றைத் தூய தமிழில் எழுதுமாறு செய்தல், எபதிக் கொடுத்தல்.

(12) தங்கள் ஊரிலுள்ள தெருக்கள், முடுக்குகளுக்குத் தூய தமிழ்ப்பெயர்களை இட்டு வழங்கச்செய்தல்.

(13) இசை மேடைகளிலும் வானொலியிலும் தமிழ்ப் பாடல்களையே பாடச்செய்தல்.

(14) வீடுதோறும் ஒரு நூலகம் கட்டாயம் இருக்குமாறு செய்தல், திருக்குறளும் திருவாசகமும் இருத்தல் முதன்மை.

(15) தூய தமிழ் பரவுதற்கு மறைலையடிகளார் எழுதிய நூல்களைப் பள்ளி, கல்லூரி நூல்நிலையங்களிலும் பொது நூலகங்களிலும் வாங்கி வைக்கச் செய்தல். ஒவ்வொருவரும் கட்டாயமாக அவற்றைக் கற்கும்படி செய்தல்.

(16) தமிழ் வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்( கழகம் நடத்தி வரும் இலக்கியத் திங்கள் வெளியீடாகி செந்தமிழ்ச் செல்வி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பொ நூலகங்களிலும் கட்டாயம் இடம் பெறச் செய்தல்.

(17) தூய தமிழ்வளர்ச்சிக்குத் துணைபுரியும் தமிழ்ப் பாதுகாப்பு நூற்றிரட்டு, வடசொல் தமிழ் அகரவரிசை, கட்டுரை வரைவியல் ஆகிய நூல்கள் தமிழ்மக்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கச் செய்தல்.

(18) சென்னைக்கு வரும்போது பல்லாவரத்திலுள்ள மறைமலையடிகள் கலைமன்றத்தையும், சென்னை இலிங்கச் செட்டித் தெரு 261 இலுள்ள மறைமலையடிகள் நூல் நிலையத்தையும் பார்வையிடல்."

இவை தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழாசிரியர்கள் மேற் கொள்ள வேண்டிய கடமைகள் எனக் குறித்தார் வ.சு. இவற்றை அச்சிட்டுப் பல்லாயிரக் கணக்கில் தமிழாசிரியர்களுக்கு நேரிலும், தேர்வுத்தாள் திருத்துதல் மையங்களிலும் வழங்குதற்கு ஏற்பாடு செய்தார்.

இவ்வாறே தமிழ்நாட்டு வரலாற்றுக் கலைக்களஞ்சியம் தொகுப்பது பற்றியும், தமிழகத்தில் நிலையான இந்தி எதிர்ப்பு இயக்கம் இருத்தல் வேண்டியதுபற்றியும், தமிழ்ப் பயிற்று