பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

297

மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்

அரசின் ஆணையும் அரவணைப்பும் இல்லாத அந்த நாளிலேயே ஆட்சிச்சொல் அகரவரிசை, அழைப்பிதழ் எழுது முறை, மக்கட்பெயர் அகரவரிசை, இல்லப்பெயர் அகரவரிசை, மலர் வழிபாட்டு வரிசை, தமிழ்த்திருமணம் ஆகிய நூல்களை வெளியிட்டு இன்றைய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் திரு.

பிள்ளையவர்கள்.

திரு.சை. வே. சிட்டிபாபு.

வேறுபட்டாலும் விரும்புதல்

அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் அவர் தம் முயற்சித் திறனை மறவாமல் போற்றுவது கேட்டிருக்கிறேன் - டாக்டர் மு. வரதராசன

ஒரு பல்கலைக் கழகம்

கழகம் பல்கலைக்கழகமாக விளங்குதல் போலவே பிள்ளை அவர்களும் பல்கலைக்கழகமாக விளங்குகின்றனர். பிள்ளையவர் களுடைய அயராத ஊக்கமும் முயற்சியும் பணியும் வியக்குந் தோறும் வியக்குந்தோறும் வியப்பிலடங்காத நிலையிலுள்ளன. ஒரு நிறுவனம்

தனி மனிதராகவே இல்லாமல்ஒரு நிறுவனமாகவே கருதத்தக்க சிறப்புடைய மாந்தர் உலகில் சிலரேயாவர். அத்தகு விழுமியோர் தந்நலங் கருதாமல் உழைப்போர், அயரா முயற்சி யுடையாேர்; அவர்களுடைய உழைப்பும் ஆர்வமும் அவர்கட்குத் தளராத இளமையையும் நீடிய வாழ்வையும் தரும் என்று கூறுவது மிகையன்று. இத்தகு மாந்தரையே திரு.வ.சுப்பையா பிள்ளை அவர்களின் நல்லியல்புகளில் காண்கிறோம்.

பொழுதெல்லாம் கழகம்

நானறிந்த வரையில் அவர்களுக்கு ஏறத்தாழ நாள் ஒன்றுக்கு நான்குமணிநேர ஓய்வுதான்; மீதப் பொழுதெல்லாம் அவர்கள் சிந்தனையில் நிறைந்து நிற்பது கழகம். கழகம் ஆற்ற வேண்டிய பணி - இவை பற்றிய எண்ணங்கள்தாம்.