பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

எண்செயல் ஏந்தல்

303

அவர்கள் ஓய்வாகச் சிறிது நேரம் உட்காரந்திருந்ததை நான் பார்த்ததில்லை. பேசிக்கொண்டே பிழைதிருத்துதல், அச்சகத்துப் பணியாளர்க்கு ஆணையிடுதல், மேலாளருக்கு ஆலோசனை கூறுதல் முதலிய அட்டாவதானங்கள் செய்வதையே பார்த்திருக்கின்றேன்.

திரு. மு. சதாசிவம்.

கண்டித்துத் திருத்துதல்

உறவினராயினும் உயிர்த்தோழராயினும் குற்றங்கண்ட விடத்துப் பணியாளரைக் கடுஞ்சொற்கூறிக் கண்டித்துத் திருத்து முறை ஒவ்வொரு செயற்குழுவிலும் நான் நேரிற் கண்டதாகும். முறைதிறம்பா நேர்மை

ஆட்சியாளர் முறைதிறம்பா நேர்மையர் ஆகலின், எக் காரணம் கருதியும் உணமைக்கு மாறான செயலுக்குச் சிறிதும் செவிசாய்ப்பது இல்லை.

அரசும் அமைச்சும்

எங்கள் கழக ஆட்சியாளர் செயற்குழுவினைச் செம்மையாக நடத்தும் முறை பெரிதும் பாராட்டற்பாலதாகும். செயற்குழு நடத்தும் பொழுதெல்லாம் நெறிபிறழா மாநில மன்னனது மதி நுட்பமும் அளனறிந்து ஆன்றமைந்த சொற்பயிலும் அமைச்சனது சொல்வன்மையும் ஒருங்கே ஆட்சியாளரிடம் அமைவன வாகும்.

- சித்தாந்தமணி வே. மா;ணக்கவாசகம் பிள்ளை. சங்கநூற் பரப்புநர்

சங்க நூல்களை வெளியிட்ட பெருமை மகாமகோ பாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களைச் சார்ந்ததுபோல அவற்றைத் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தி நாடு முழுவதும் பரப்பிவரும் பெருமை திரு. பிள்ளை அவர் களைச் சார்ந்ததாகும் என்பேனாகில் அது புனைந்துரையன்று.

- பேராசிரியர் பூ. ஆலாலசுந்தரன்.