பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. கல்லைக் கனியாக்கும் தலைவல்லார்

(ஆட்சிமொழிக் காவலர்

திரு.கீ.இராமலிங்கனார் எம்.ஏ., தமிழ் மணம்,

சென்னை.)

1936 இல் திரு.வ.சு. பிள்ளையவர்கள் முன்னின்று ஏற்பாடு செய்த கலைச்சொல் ஆக்கக் குழுவில் என்னையும் இரண்டு உட்குழுக்களில் உறுப்பினராகச் சேர்த்திருந்தார்கள். பச்சையப்பன் கல்லூரிப் பழைய கட்டிடப் பெருமண்டபத்தில் குழுக் கூட்டங்கள் நடந்துவந்தபோது, திரு. பிள்ளையவர்கள், உயிர் ஓட்டம் மிக்க மின்கம்பிபோல விளங்கி, நிகழ்ச்சிகளை இயக்கி வந்தது இன்றும் என் நினைவில் இனிக்கின்றது.

அப்போது நான் சைதாப்பேட்டை நகராட்சி ஆணையனாகப் பணிபுரிந்து வந்தேன். அக் குழு ஆராய்ந்து முடிவு செய்த கலைச் சொற்களே பின்னால் அத் துறையில் வளர்ச்சி ஏற்பட அடிப் படையாக அமைந்தன என்பது எவரும் அறிந்தஉண்மை.

தமிழைத் தம் தாய்மொழி எனப் பலர் அறிய விளம்பிக் கொண்டு வந்ததும், சிலர் தமிழர் மாநாடு என்னும் பெயரில் ஒரு மாநாடு கூட்ட மனம் கூசியவர்களாயத், தமிழ் அன்பர் மாநாடு என்னும் பெயரால் அதுபோது, ஒரு மாநாடு கூட்டியது கண்டு, திரு. பிள்ளையவர்களின் உள்ளக கொதித்து எழுந்ததை நான் அறிந்து அவர்களது தமிழ் ஆர்வத்தைப் பெரிதும் போற்றினேன்.

1938 இல் நான் பாளையங்கோட்டை நகராட்சி ஆணையனாக மாற்றப்பெற்றதும் அந்நகரிலே அவர்களது இல்லத்தில் திரு. பிள்ளையவர்களையும், அவர்கள் தமையனார் திரு.வ.திருவரங்கம் பிள்ளையவர்களையும் அடிக்கடி பார்த்து அளவளாவி அகமகிழ்வேன். வடசொல் தமிழ் அகரவரிசை முதலிய பல அரிய நூல்களின் ஆசிரியரும், அருள்திரு. மறைமலையடிகளார் திருமகளாருமான திருவாட்டி நீலாம்பிகை திருவரங்கம் அவர்களையும், அருமைக் குழந்தைகளையும் கண்டு களிக்கும்பேறு அங்கு எனக்குக் கிட்டி வந்தது. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்னும் தொடரை நினைவூட்டும் வகையில்