பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




326

இளங்குமரனார் தமிழ்வளம் - 27 ஓ

தூய தமிழிலே அப் பலகைகளை அமைப்பதற்கு வணிகர்களுக்கு ஊக்கம் ஊட்டும் வகையில் அச்சிட்டு வழங்க, அப் பெயர்களுக்குத் திருந்திய உருவமைத்துத் தருமாறு என்னைப் பலமுறை பார்த்து வலியுறுத்திக் கூறியபடி இருக்கின்றார்கள். எனக்கும்ம இப் பணியை இனிது முடிக்க அவா உந்தாமல் இல்லை. எனினும் அவர்களது இடைவிடாத தூண்டுகோலே, இத் தொண்டில் என்னை விரைந்து ஈடுபடுத்தி வெற்றியோடு இதனை முற்று விக்கத்துணைபுரியும் ஆற்றலுடையதாகும்.

திரு. பிள்ளையவர்களைக் காணுபோதெல்லாம், நினைக்கும் போதெல்லாம் அவர்களது அசைக்கலாகாத அன்னை மொழிப் பற்றும், தணிக்கலாகாத தனித்தமிழ் ஆர்வமும் என் நெஞ்சத்தை ஈர்த்து இன்புறுத்தும். தமிழ்த்தாய் செய்த தவப்பயனாய் அவர்கள் தமையனார் திரு. வ. திருவரங்கம்பிள்ளையவர்களும், திரு. பிள்ளையவர்களும் ஐம்பது ஆண்டுகட்கு முன்பு திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைத் தோற்றுவித்திராமலிருந்தால் தோற்றுவித்தும், ஓயாது, முனைந்து இன்றுள்ள அரும்பெரு நிலைக்குக் கழகம் உயருமாறு உழைத்திராமலிருந்தால், இத்தனை இலக்கிய, இலக்கண அறிவுசால் நூல்களை இவ்வளவு திருத்தமான முறையில் இத்துணை அழகழகான வடிவங்களில் தமிழுலகம் எங்ஙனம் பெற்றுப் பயனடைய இயன்றிருக்கும் என எண்ணி எண்ணி இறும்பூது எய்துகின்றேன்.