பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




330

இளங்குமரனார் தமிழ்வளம் - 27ஓ

4. காலங் கணிக்கும் கணியம்

5-8-'71

பேரன்புமிக்கீர்,

வணக்கம். நலம்; நலம் பெருக. தங்கள் அன்பான 4-8-71 கடிதம் கைவயம். நன்றி.

இலக்கண அகராதியை முதற்கண் மிகவும் விரித்து எழுதுதல் வேண்டாமென்பதே அதனை விரிவுபடுத்தி வெளியிடலாம். பத்து ஆண்டுகளில் அத்தகைய ஆர்வம் பெருகும் என்ற முழு நம்பிக்கை யுடையயேன்.

நம் செல்வம் இப்போது வெளிநாடுகட்குச் செல்வதில்லை. இங்கேயே தங்குவதால் ஊர்திகள் பெருகுவதும், இல்லங்கள் யாண்டும் எடுக்கப்பெறுவதும், பொதுவாக வாணிகமும் தொழிலும் வளர்ந்து வருதலும், பண்டங்கள் விலைஉயர்ந்து வருதலும் காண்கின்றோம். பணம் பெருகிய பின்னரே நம் பழைய இலக்கியங்கள். கலைகள், திருக்கோயில்கள் முதலிய அறநிலையங்கள்மீது நம் மக்கட்கு அளவற்ற பற்று ஏற்படும். பணப் பெருக்கத்தால் அமெரிக்கா போன்ற பிற நாட்டினர் தங்கள் நாட்டு இலக்கியங்களைப் பேணுவது மட்டுமின்றி வெளிநாட்டு இலக்கியங்களையும் வாங்கிப் போற்றுகின்றனர். அத்தகைய எண்ணம் நம்மிடமும் சில ஆண்டுகட்குப்பின் ஏற்படும் என்று உண்மையாகவே நம்புகின்றேன். எனவே நம் பணிக்கு நல்ல எதிர்காலம்உண்டு.

தங்கள் அரிய முயற்சிக்கு நல்ல ஆதரவு பிற்காலத்தே கிடைக்கும். தங்கள் நலங்களைக் கோரித் திருவருளை வழுத்தும்,

அன்புள்ள,

வ.சுப்பையா

கழக ஆட்சியாளர்.