பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




CC

ஊசி முனையளவும் ஒன்றுமே செய்யாமல் பேசித் திரிகின்ற பித்தருளே - கூசாமல் அல்லும் பகலும் இனிதுழைக்கும் நம்குமரர் சொல்லும் பொருளும் சுவை.

- முனைவர் தமிழப்பனார்

ララ

'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" என்றார் பாரதிதாசன். தமிழ்ப்பணி வேறு தமிழ்த்தொண்டு வேறு. தமிழாசிரியர்களும் பேராசிரியர்களுங்கூட தமிழ்ப்பணி ஆற்றுபவர்கள்தாம். ஆனால் தமிழுக்குத் தொண்டு செய்வோர் என்று கணக்கிடத் தொடங்கினால் விரல்களின் எண்ணிக்கைகளுள் கூட ஆள்கள் கிடப்பது அரிது. இந்த அரிதானவர்களுள் ஒருவர் தாம் புலவர் இளங்குமரனார். இவர் முன் சென்று திருக்குறள் என்று சொன்னால் கன்னத்தில் போட்டுக் கொள்வார். இவருக்கு எல்லாமே திருக்குறள் தான்.

- முனைவர் இரா. கோதண்டபாணியார், ‘கல்கி' இதழில் (24.10.1999)

2, சிங்காரவேலர் தெரு

தியாகராயர் நகர்

சென்னை –

னை - 600 017