பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. ஒரு மனிதர்

(ஒருவன் தன் தோளிலேயே தன் பிள்ளையை வைத்துக் கொண்டு அதனைத் தெருத் தெருவாகத் தேடினான். அதுபோல் உலகம் மனிதனைத் தன்னருகில் வைத்துக் கொண்டே மனிதனைத் தேடி எங்கெங்கோ அலைகின்றது.)

பட்டப்பகலிலே ஒருவர் தம் தலைமேல் விளக்கைத் தாங்கிக் கொண்டு வந்தார். தெருவில்போகின்றவரும் வருகின்ற வரும், "பகலிலே விளக்கேந்திப்போகும் இந்தப் பைத்தியத்தைப் பார்" எனப் பேசி நகைத்தனர். ஒருவர் "பெரியவரே, பகலிலே ஏன் விளக்கேந்திக்கொண்டு அலைகிறீர்?" என வினாவினார். "நான் மனிதனைத்தேடி அலைகிறேன்" என்றார் அந்த மனிதர். 'தயாசீனசு' என்பது அவர் பெயர். மனிதரை மனிதர் தேடுவதும், மனிதரைமனிதர் கண்டு கொண்டாடுவதும் உலகில் காணும் நிகழ்ச்சிகளே.

விளக்கேந்திக்கொண்டு வீதியிலே அலைந்து மனிதரைத் தேடியது மேலைநாடு. தமிழ்நாடு, திண்ணையிலேயிருந்து மனிதரைக் கண்டு களிப்புற்றது.

திருவொற்றியூரில் தேரடித் தெருத்திண்ணையில் இருந்தார் ஒரு துறவி. ஆங்கு இருந்துகொண்டு, போகும் மக்களைப் பார்த்து அவரவர் தன்மைக்குத் தக்கவாறு அது போகிறது", இது போகிறது" என்று கூறிக்கொண்டிருந்தார். அவ் வழியாக ஒரு நாள் வள்ளலார் வரக் கண்டார் துறவி; பணிவோடு எழுந்தார்; உயர்ந்தமனிதர் வருகின்றார் என்றார். பேரருள் பெருக்கமே ஓருருவாகித் தொண்டிலே துலங்கும் வள்ளலாரே உயர்ந்த மனிதர் எனக் கொண்டார், அத் துறவி. மனிதரை மனிதர் கண்டு கொண்டார்.

மனிதப்பிறவி எடுத்தாலும் மனிதராகக் காட்சியளித் தாலும்மனிதத்தன்மை இல்லதவரும் உலகில் வாழ்தல் கண்கூடு. திருவள்ளுவர் இத்தகையவர்களை, மக்களே போல்வர் கயவர் என்றார். பாரதியார், "வேடிக்கை மனிதர்” என்றார். அவ் வேடிக்கை மனிதர் இயல்புகளை அவர் விரித்துக் கூறினார்.