பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

"தேடிச் சோறுநிதம் தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்திக் - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதர்.’'

அரிதில் எல்லாம் அரிதாம் மானிடப்பிறவியை ஊணுக்கும், வெட்டிப் பொழுது போக்குக்கும், வெறுக்கும் செயல்களுக்குமே உரிமையாக்கியவர் 'வேடிக்கை மனிதர்' என்பதில் வியப்பில்லையே! அதே பொழுதில், எள்ளைத்தனைப்பொழுதும் பயனின்றி இராது, திட்டமிட்ட வகையிலே திருத்தொண்டு செய்பவர் மனிதருள் மனிதர் என்பதிலும் வியப்பில்லையே!

மனிதருள் மனிதராக ஒருவரை ஆக்குபவர் யார்? அவரே தம்மை ஆக்கிக்கொள்ளல் வேண்டும். "நல்ல நிலையிலே தம்மை நிறுத்துபவரும், அந்நிலையிலே இருந்துதம்மைத் தாழ்த்துபவரும், தாம் இருக்கும் நிலையிலே இருந்து, மேலும் மேலும் உயர்த்திக் கொண்டு போபவரும், எவர்க்கும் தலைமையானவராகத் தம்மைச் செய்பவரும் தாமேயன்றிப் பிறரல்லர்" எனப் பேசும் ஒரு நாலடிப்பாட்டு. இந்நிலை எவர்க்கு உண்டாம்? திருமூலர் இதற்குத் தெளிவான விடை பகர்கிறார் :

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செயு மாறே.

என்பது அது.

39

இறைவன் படைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, இதற்காகவே என்னைப் படைத்தான்; அவ்விறைவன் படைப்பின் நோக்கத்தை என்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு அரிதின் முயன்று நிறைவேற்றுதலே என் பிறவிப்பயன்” எனக்கொண்டு பாடுபடுபவரே பண்பட்ட மனிதர்! இத்தகையவரையே “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்" என்பார் திருவள்ளுவர்.

பெருமை மிக்க மனிதராக வாழ்பவர் எவரோ அவர், தாம் பிறந்த மண்ணுக்கும், தாம் பிறந்த இனத்துக்கும், தாம் இருந்த காலத்துக்கும், தாம் செய்யும் தொழிலுக்கும் பெருமை சேர்க்கின்றனர். இத்கையோர் பெருமையே, எதிர்கால மாந்தரால் எடுத்துக்காட்டாகக் கொள்ளும் ஏற்றம் பெறுகிறது. இவர்கள்