பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. பெருமகனார் பிறந்தார்

(பிறக்கும்போதே ‘மரு'வும் மணக்கும்; மருக்கொழுந்தும் மணக்கும்; துளசியும் மணக்கும்; ஆனால், துளசி மணம்பெருக்கு வதுடன் வழிபடு பொருளாகவும் பெருமை பெற்றுவிடுகிறது.)

தமிழ்ச்சொல்லுக்குத் தனிச்சிறப்பு உண்டு. ஒவ்வொரு சொல்லையும் உன்னிப்பாக நோக்கினால், அஃது ஒரு வரலாற்று ஓவியமாக விளங்கும். 'சிகன்' 'மகள்' என்னும் சொற்கள் அச் சொற்குடையார் உயர உயர மான், மாள் என உயர்ந்து விடுகின்றது. பெருமகன் ‘பெருமான்' ஆகின்றான். பெருமகள் பெருமாள் ஆகின்றாள்! பெண்பெருமாள் வேண்மாள் முதலிய பெண்பாற் பெயர்களை அறிவோர் 'பெருமாள்' என்பது பெண்பாற் பெயர் என்பதை ஐயுறார்:

'அகல்' 'ஆல்' ஆகவில்லையா? அகன்ற புலமையும், அகன்ற உளமும் உடைய அகன்றோர் ஆன்றோர் அல்லரோ! இவ்வாறே பெருமகன் ‘பெருமான்' ஆகின்றான்; சேக்கிழார் பெருமான் சீரடி போற்றி, வள்ளுவர் பெருமான் வளர்புகழ் பாடி, சிவபெருமான் செழுங்கழல் வாழ்வே வாழ்வாகக் கொண்ட பெருமகன் சுப்பையா பிள்ளை தோன்றினார். "தோன்றிற் புகழொடு தோன்றுக!" என்பதற்கு இலக்கியமாகத் தோன்றினார்: பெருமகன், ‘பெருமான்' ஆனார்!

"செந்தமிழும் சந்தனமும் திசையெல்லாம் பரிமளிக்கப் புகழ் மணக்கும் திருநாடு பொருநைநாடு. அந்நாட்டிற்கு அணிசெய்யு திருநகர் 'நெல்லை' எனப்பெறும் 'திருநெல்வேலி'. அதற்குக் கீழ்பால், பெருகி வளர்ந்த பேரூர் பாளையங்கோட்டை. அப் பாளையங்கோட்டையிலே பிறந்தார் திரு.வ.சு."

மதுரையை அடுத்து வடபால் மோகூர் என்னும் பழைமையானதோர் ஊர் உளது. அவ்வூரைப் பழநாளில் ஆட்சிசெய்தவன் பழையன் மாறன் என்பான். அவன் இளையோன் இளம் பழையன் மாறன் என்பான். அவன், கோட்டையெழுப்பிக் குடியமைத்துக் கோலோச்சிய இடம் பழையன் கோட்டை. அப்