பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

கல்வியில் ஈடுபாடு காட்டும் சிலர் வீட்டுக்கு உதவியாக இருப்பது இல்லை. ஆனால் வ.சு. அன்னைக்கு எவ்வளவு உதவியாக இருக்க முடியுமோ அவ்வளவு உதவியாக இருந்தார். வீட்டுப் பொறுப்புகளை விருப்பொடு செய்தார். வீதிக்குச் சென்று வெட்டிப் பொழுது போக்குவதோ அரட்டைஅடித்துப் பொழுதை வீணாக்குவதோ இளம் பருவத்திலிருந்தே இவர் அறியாதவை.

பொழுதை வீண்படுத்தாத நல்ல வழக்கம் வாளா ஒழியுமோ? பொருள் வகையிலும் சிக்கனமாக இருக்கவும், சிறு சிறு தொகையையும் சேமித்து வைக்கவும் தூண்டுதலாக அமைந்தது. கொழும்பில் இருந்து அருமைத் தமையனார்அனுப்பும் பணம் இவர் பெயருக்கே வரும். வீட்டுக்குச் சேர்க்க வேண்டிய தொகையை வீட்டுக்குச் சேர்ப்பதுடன், தமக்கெனத் தனியே வரும் தொகையையும் கணக்கிட்டுச் சிக்கனமாகச் செலவிட்டார்.

சிக்கனப் பண்பிற்கு அண்ணல் காந்தியடிகளையும் தந்தை பெரியாரையும் எடுத்துக்காட்டாகக் கூறுவர். அவ்வாறே ஒவ்வொரு சிறுவகையிலும் சிக்கனத்தைப் போற்றிய செம்மல் வ.சு. ஆவர். இன்றியமையாத் தேவைக்கே அன்றிப் பிறிது எதற்கும் செலவழித்தலைச் சால்பாகக் கொள்ளாத சான்றாண்மை இளமை தொட்டே இருந்தைைமயால, இவர் தம் வாழ்வில் தீயவை எவையும் புகாமல் தடுத்தாட்கொள்ளும் திருப்பேறு வாய்க்கப் பெற்றார்.

இளமையிலே இச்சீரிய சால்பு சிறந்தோங்கக் காரணமாக இருந்தவை பலப்பல. அவற்றுள் தலையாய ஒன்று, ஒவ்வொரு நாளும் தவறாமல் வரவு செலவு எழுதும் நற்பழக்கமாகும். பொருளியல் அறிஞர்கள் வலியுறுத்தும் இம் முதல் திட்டத்தை முதன்மையாகக் கொண்டு எவரும் ஓதுவிக்காமல் உணர்ந்து கடைப்பிடித்தது அவ் விளம்பருவத்தில் செயற்கரும் செயல் என்பதை எவரும் அறிவர்.

கல்வித் திறத்திலும், பண்பாட்டிலும் சிறந்து வளர்ந்த வ. சு. 1916 ஆம் ஆண்டு பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். கல்லூரியில் கால் வைக்க விரும்பினார். ஆனால் பொல்லாப் பொருள்முடை வல்லாண்மை காட்டித் தடுத்தது. அப்போது வாய்ப்பாக இருந்த அஞ்சலகப் பணியில் சேர விரும்பினார். ஆனால் அண்ணல் அரங்கனார் பேருள்ளம் வேறாக இருந்தது. தம் கல்வியைப்போல் தம்பியார் கல்வியும்