பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

எல்லாம் உதவும் வலவகைப் பயன் பொருள்கள், பலசரக்கு, அழகுப் பொருள்கள் ஆகிய வணிகங்கள் எல்லாம் உலகியல் நடைமுறைக்கு வேண்டுவனவே; மேற்கொள்ளத் தக்கனவே! இவ்வாணிகங்களில் நேர்மை காணப்பெறின் அருமையாம். அஃது அதில் ஈடுபட்டுள்ள நன்மக்கள் உள்ளத்து ஊற்றெடுத்த பெருங்குணத்தின் வெற்றியால் அமைந்ததே எனலாம்.

ஆனால், இவ்வெல்லா வாணிகங்களினும் தலையாயது ஒன்று உண்டு எனின், அஃது அறிவு நூல் வாணிகமே எனத் துணிந்து கூறலாம்.

மரத்தின் வளைவை நேராக்கவா, கல்லை நேராய் உடைக்கவா, மனையிடத்தை நேராய் அறுக்கவா, நூல்அடித்தே செய்யபடும். அதுபோல் மனத்திலுள்ள கோணல்களை அகற்றி நேராக்க வல்லது அறிவு நூல். அவ்வறிவு நூல்களை வெளியிட்டு, விற்பனை செய்யும் வணிகத்தை மேற்கொள்வது கண்ணொளி இல்லார்க்குக் கண்ணொளி வழங்கும் வள்ளன்மை போல்வதாம்! அறங்கள் எனச் சொல்லப்படும், எல்லாவற்றையும் செய்யும் அருமையிலும் அவ் வறத்திற்கு நிலைக்களமாக நின்று என்றும் காக்கும் நூல்களை வெளியிடுதல் மிகு பெருமைக்குரியதேயாம்.

நூல்கள் வெளியீடு என்பதிலும் எத்தகைய புன்மைகள் பல்கியுள? இளைஞர் வாழ்வைக் கெடுத்து என்றும் கடைத்தேற ஒட்டா இழிவில் தள்ளும் கீழ்நிலை நூல்கள் எத்தனை? கையால் தொட்டாலும் கண்ணால் கண்டாலும் சவர்க்காரம் இட்டுக் கழுவினாலும் தூய்மையாகாத கயமை நூல்கள் எத்தனை? பிறந்த மேனிப் படங்களை வெளியிட்டுப் பேதையர் உள்ளத்தை வயப்படுத்தி அழிக்கும் இழிதகை நூல்கள் எத்தனை? இவற்றை எழுதுவித்தும் பதிப்பித்தும் வாணிகம் செய்வதை நூல் வணிகம் என்று சொல்லலும் இழிவேயாம். இவை எத்தீய வணிகத்தினும் தீய வணிகமாம். ஏனெனில் மற்றைத் தீய வணிகங்கள் வழிவழி உடலையும் பொருளையும் மட்டுமே கெடுக்கும். இத்தீய வணிகமோ, உயிர்ப்பையே ஒடுக்குவது! உயிர்ப்பை ஒடுக்கிய பின்னே உய்வேதும் உண்டோ? யாதும்இல்லையதாம்!

6

அறிவுநூல் வாணிகத்தில் தலைப்படுவார்க்குத் தனித் தகுதிகள் வேண்டும் பிற வாணிகங்களுக்குப் பொருளும் முயற்சியும் இருப்பின் வெற்றியாம். ஆனால் அறிவு நூல் வாணிகம் செய்தற்கு அறிவுக் கூர்ப்பும், அறவுணர்வும், அருட்பெருக்கும் இன்றியமையாது வேண்டத்தக்கவை. ஒரு பள்ளி ஆசிரியன் செய்யும் பிழை அப் பள்ளியளவில் கேடு செய்து செய்து