பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

47

கழகம் கால் கொண்டு கவினுறத் துலங்குவதை அறிந்தார் தமிழ் நூல் தொகுப்பார்வலர் பாகனேரி மு. காசிவிசுவநாதன் செட்டியார். கழகத் திட்டங்களும், கண்ணைக்கவரும் அதல் பதிப்புகளும் அவரைக் கவர்ந்தன. தனவைசிய இளைஞ தமிழ்ச்சங்கத் தலைவராகவும், புரவலராகவும், திகழும் அவ கழகப் புரவலராகவும் அமைய ஆர்வம் கொண்டார். பத்து உரூபா பெறுமான நூறு பங்குகளை அவர் ஏற்றுக்கொண்டார். இதனால், “கழகத்தொடக்கத்தில் நூறு பங்கு எடுத்துக்கொண்ட விசுவநாதர் கழகத்திற்கு வித்திட்டவர் என்றால், இவ் விசுவநாதர் கழகப்பயிர் செழித்து நற்பயன் வழங்க வேலியிட்ட வித்தகர் ஆவர்" எனச் சான்றோர்களால் புகழும் பேறு பெற்றார். இருவரும் விசுவநாதப் பேருடையார் என்பது கருதத்தகும் சிறப்பன்றோ!