பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8. கழக நோக்கச் சிறப்பு

(தனக்காகவே பிறர் வாழவேண்டும் என்பது ஆணவநோக்கு, தானே வாழவேண்டும் என்பது மிக மிகக் குறுகிய நோக்கு, தானும் வாழவேண்டும் பிறரும் வாழவேண்டும் என்பது பொது நோக்கு; தனக்காகப் பிறரும், பிறருக்காகத் தானும் வாழ வேண்டும் என்பது ஒப்புநோக்கு; பிறருக்காகவே தான்வாழ வேண்டும் என்பது பெருநோக்கு. இந் நோக்கம் உடையவரால் தான் உலகம் உண்கிறது.)

'நோக்கு' என்பது பழந்தமிழ்ச் சொல். செய்யுளியல் கூறவந்த ஆசிரியர் தொல்காப்பியனார் அதன் உறுப்புகளைக் கூறுங்கால் நோக்கு என்பதொன்றையும் குறிப்பிடுகின்றார். அதன் இலக்கணம் இன்னதெனவும் தெளிவிக்கிறார். முழுதுற நோக்கிக் கழி பேரின்பம் கொள்வதே நோக்கு' என்பது அவர் கருதும் பொருளாகும்.

பார்வை பரந்துபட்டுச் செல்வது; காட்சி கண்ணுக்குக் களிப்பூட்டுவது; நோக்கு உள்ளத்திற்கு உவகையூட்டுவது.

பார்வை கண்களை இயல்பாய் அகலத் திறக்கப் பிறந்து எணும் பொருளிலும் பரவிச் செல்லும்.

காட்சி கண்ணை ஆர்வத்தால் திறப்பித்து உணர்வை உண்டாக்கிப் பாராட்ட வைக்கும்.

நோக்கோ, குவிந்து சென்று உள்ளத்தின் ஆழத்தில் பதிந்து உணர்வை உண்டாக்கி மெய்ம்மறக்க வைக்கும். இந் நோக்கை நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே' என நயமிகக் குறித்தார் தொல்காப்பியனார். 'கவிகண் நோக்கு' என நோக்கினை ஓவியமாக்கிக் காட்டினார் ஒரு சங்கச் சான்றோர். நோக்கு, காதல் பொருட்டாதலை வள்ளுவர் முதலாகச் சொல்லியல் உணர்ந்த புலவர்கள் எல்லாரும் சுவைகெழுமப் பாடினர்.

நோக்கில் இருந்து கிளர்ந்தது நோக்கம். நோக்கம் ஆர்வமிக்க கடைப்பிடியாயிற்று. அதுவே குறிக்கோள் ஆயிற்று. கோள்