பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

49

என்பது என்ன? கொள்ளுகை, கடைப்பிடி என்க. மாந்தர் வாழ்வு, நேர்க்கொடு பட்டது. இல்லையெனில், போக்கொடு போய்க் கெட்டொழிந்ததேயாம். இத்தகைய நோக்கின் நுட்பமும், பயனும், இன்றியமையாமையும் உணர்ந்து அமைக்கப்பட்டதே கழக நோக்கம் ஆகும்.

"தனியாடு மேய்ப்பதினும் கூட்டாடு நன்றாம்; இனிநாடே கூட்டு றவை நாடு"

என்பது கூட்டுறவின் சிறப்பு வலியுறுத்தல். கூட்டாடு மேய்த்தல் நாட்டுப் புறங்களில் காணக்கூடியதே. கால்வலுவாக ஊன்றவு மாட்டாத ஊன்றுதலை எண்ணவும் மாட்டாத காலத்தே, நூற்பதிப்பு நிறுவனத்தில் புகுத்தியதே சீரிய நோக்காகும். இந் நோக்கில் துவங்கிச் சிறந்த பணிசெய்துவரும் பொதுக் கழகம் தென்னாட்டில் இஃது ஒன்றேயாகும்.

"கழக ஊதியத்தில் இருந்து நூற்றுக்கு ஆறு விழுக்காட்டுக்கு மேல் பங்காளிகள் ஊதியம் பெறுதற்கு உரிமை இல்லை” என்ப அறந்தழுவிய பொருளே முதன்மையெனக் கருதாத - ஒ நோக்கம் ஆகும்.

மற்றொன்று, “கழகத்துக்கு ஏற்படும் செலவு நீக்கிக் கிடைக்கும் ஊதியத்தில் சரிபாதி இக் கழகத்தின் ஆட்சியில் உள்ள தென்னிந்திய சைவசித்தாந்த சங்கத்திற்கும், தென்னிந்திய தமிழ்ச் சங்கத்திற்கும் கொடுக்கப் பெறுதல் வேண்டும் என்பது. இத் தேர்ச்சி மிக்க திட்டத்தால் இச் சங்கங்கள் சைவ உலகுக்கும் தமிழ் உலகுக்கும் செய்துள்ள - செய்துவரும் - சிறந்த தொண்டுகள் மதிப்பிடற்கு அரியன.

இன்னும், எந்தவொரு வெளியீட்டகமும் இதுகாறும் மேற்கொள்ளப்பெறாத நிகரற்ற இரண்டு திட்டங்களை வகுத்துக் கொண்டது கழகம்.

ஒன்று : ஆராய்ச்சியாளர்க்கு அருந்துணை யாகத்தக்க வகையில் கிடைத்தற்கு அரிய நூல்களையெல்லாம் தொகுத்து நூல்நிலையம் ஆக்குதல் என்பது. இத் திட்டத்தால் இவ்வுலகின் எந்த ஒரு நூல் நிலையத்திலும் திட்டவட்டமாகப் பெறுதற்கு முடியவே முடியாது எனத்தக்க பல்லாயிரம் அருந்தமிழ் நூல்களை அந்நாள் முதலே தொகுத்து வைக்கும் பேறு வாய்த்தது. இஃது உலகமெங்கும் உள்ள எந்த வெளியீட்டு நிறுவனமும் செய்தறியாத செயலாகும்.