பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

மற்றொன்று: இதழ் வெளியிடுதல் என்னும் நோக்கம். இந் நோக்கத்தால் அருங்கலைச் செல்வமென மதித்து அட்டை கட்டி, வைத்துப் பேழையுள் என்றும் போற்றிக் காக்கத்தக்க கருவூலமாகச் ‘செந்தமிழ்ச் செல்வி' என்னும் திங்களிதழ் தடைப்படுதல் இல்லாமல் 1923 ஆம் ஆண்டுத் தொடக்க முதலே அரும்பெருந் தொண்டாற்றி வருகிறது.

இவையெல்லாம் கழக நோக்கச் சிறப்பின் அடிப்படை யால் நாடு பெற்ற நற்பயன்களாம்.

இனி, நூல்களிலும் எந்நூல் ஆயினும் வெளியிட்டு விடுவதா? இல்லை! அவற்றையும் முன்னதாகவே அறுதியிட்டு உறுதிப் படுத்தப் பெற்றுள்ளன.

"சைவசித்தாந்த நூல்களையும் அவற்றின் கருத்துக்கு மாறுபாடில்லாத பழைய அடிறவு நூல்கள், கருவி நூல்கள், உலக நூல்கள் முதலியவற்றையும் இதுவரை அச்சுக்கு வராத வையும், இப்போது கிடைத்தற்கு அரியவாயுள்ளனவுமான நூல்களையும் பதிப்பித்து விற்பனை செய்தல்,

"மேற்குறித்த நூல்களுக்கு அறிவுடைய பெரியார் பலரைக் கொண்டு ஆராய்ச்சிகள், விளக்கவுரைகள் முதலியன எழுதுவித்து அவற்றைப் பதிப்பித்து விற்பனை செய்தல்.'

"வடமொழியிலும் மற்றும் பிறமொழிகளிலுமுள்ள அறிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பதிப்பித்தல், விற்று முதல் செய்தல்."

"தமிழ் நூல்களை ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழி பெயர்த்துப் பதிப்பித்து விற்றுமுதல் செய்தல்.'

இவையெல்லாம் எத்தகைய எதிர்கால நோக்கொடு அமைக்கப் பெற்றவை என்பதைக் கருதி மகிழ்க.

இன்னொன்று : தமிழ்மொழி இந்நாளில் எவ்வெத் துறை களில் பெற்றிருக்கும் ஏற்றங்களுக்கும் அடிப்படையாக அமைந்த கழகத்தின் திட்டமிட்ட பணிகளேயாம்.. தனித்தமிழ் இயக்கப் பாசறையாகத் திகழ்ந்து வருவரும் கழகமேயாம். இவற்றுக் கெல்லாம் காரணராக இருந்தவர் எவர்? அரங்கனாரும், அவர் அருமை இளவல் வ. சு. வுமே ஆவர் அன்றோ!