பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

போலக்' கழகத்தைக் காத்தனர் என்றால், அவர்களுடன் அணுக்கமாக இருந்து அறிவன அறிந்து அவர்கள் வழித்தடத்துச் செல்வதே வாழ்வாக வகுத்துக்கொண்ட இளவலார் வ. சு. கழகக் குழந்தைக்குச் செல்வச் செவிலியாகி வளர்த்துப் பொன்னும் மணியும் பூட்டிப் பொற்புறுத்தி மகிழும் புகழ்த்தொண்டராகத் திகழ்கிறார்! இப்படித் தகுதி வாய்ந்த ஆடசிமுறையால்வாழ்ந்து, தகவினால் வளர்ந்தமை யால்தான்,. அறிஞர்க்கு அறிஞராம் அண்ணா அவர்கள்,

"ஒரு காலத்தில், தமிழில் எத்தனைபுத்தகங்கள் இருக்கின்றன" என்று சிலர் கேட்டதுண்டு. ஆனால் இன்றைக்கு ஓர் ஐயாயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத் துக்குப் போனால், அத்தனைக்கும் தமிழ்ப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு திரும்பமுடியும். அந்த அளவு தமிழில் இன்று புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன".

என்க.

என்று பாராட்டும் திருவாழ்வு கழகத்திற்கு அமைந்தது

முற்காலத்தில் ஒரு நூலை இயற்றியவர் அந்நூலின் இறுதியில், இந்நூலைப் படித்தவரும், படிக்கக்கேட்டவரும், விரும்பிப் படியெடுத்துக் காத்தவரும், பிறருக்கு உதவியாகத் தந்தவரும்இன்ன இன்ன நலங்களை யெல்லாம் பெற்றுப் பேரின்பமும் எய்துவர் என்று எழுதுவது உண்டு! அவ்வகையில் தமிழன்னைக்கு அணிகலமாகிய ஆயிரத்து எழுநூற்றைம்பது நூல்களை அழகொழுக வெளியிட்டுத் தமிழின் தனிபெருஞ் சிறப்பை உலகெல்லாம் பரப்பிய கழகப்பணியில் ஈடுபட்ட பெருமக்கள் எவராயின் என்ன, அவரெல்லாம் பெற்றபேறு பிறர்க்கு வாய்க்கா அருமையேயாம் என்றால், அதன் கண்மணி களெனத் திகழ்ந்த அரங்கர்க்கும் அவர் இளவல் வ.சு. விற்கும் தமிழகம் எத்துணைக் கடமைப்பட்டுள்ளது என்பது சொல்லாமலே விளங்கும்.