பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

தொடங்கும் பணி. வெளியிடத்தக்க நூல்களைத் தேடுதல், அச்சகம் தேடுதல் - தாள் தேடுதல் - ஓவியரைத் தேடுதல் - பட அச்சுக் கட்டைகளை ஆக்குதல் - அட்டை கட்டுதல் - இன்னபல கடமைகளையெல்லாம் பலகால் பலர் இணைந்து செய்த பின்னரே ஒரு நூலை வெளியிட்டு ஊரெல்லாம் சுற்றி விற்றால், அடுத்த நூல் வெளியிட இயலுமா? போக்குவரவுச் செலவிலேயே போய்ப் படுத்துவிடுமே வெளியீட்டுப்பணி - ஆதலால், தொடர் தொடராக நூல்கள் வெளிப்பட வேண்டும். பிறர் வெளியீட்டு நூல்களை வாங்கி விற்றலும் வேண்டும்; இப்பணிக்கு நெல்லையினும் சென்னையே மிக்க வாய்ப்புள்ள இடமாம் என்பதை எவரும் அறிவர். ஆதலால் கழகப்பங்கு நிறுவனத்திற்குப் பணமுதலீட் டாளக்களைத் தேடும் பணியைத் திறமாக நெல்லையில் இருந்து அரங்கனார் புரிந்தார். வெளியீட்டுப் பணியைச் சென்னையில் இருந்து தம்பியார் வ.சு. புரிந்தார். ஆதலின், கழகப் பேரால ரத்தின் இருகவடுகளாக இருவரும் இருந்து பணிசெய்தமையே புதன் பெருவளர்ச்சிக்கு இடமாயிற்று என்பது அறிந்து இன் றுதற்குரியது.

கழகம் வெளியிட்ட முதல் வெளியீடு 'திருவடிப் புகழ்மாலை'. ஆகும். இறைவன் திருவடிப் போற்றிலே பெரிதும் தோய்ந்து பிறரும் கண்டடைய நூலாக்கிய பெருநாவலர் திருவள்ளுவர். அவர் இயற்றிய கடவுள் வாழ்த்துப் பத்துப் பாடல்களில் ஏழு பாடல்கள் திருவடிப் புகழ்ச்சியே எனின் அதன் சீர்மை செவ்விதின் விளங்கும்; வள்ளுவர் உள்ளத்தை வாழ்வாக்கிக்கொண்டு வழிகாட்டிய பெருமகனார் வள்ளலார்.. அவர் பாடிய திருவடிப் புகழ்ச்சியின் பெருமை, பொருட்சிறப்பால் மட்டுமன்றி எவரும் இதுகாறும் பாடி அறியா அடியளவாலும் வெளிப்படும்! 224 சீர்களால் அமைந்த கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் (128 அடிகளான் அமைந்தது) பாடினார். இத்தகைய பெருமை வாய்ந்த திருவடிப் புகழ்ச்சியிலே முதல் வெளியீட்டு நூல் தொடங்கியமை ஒரு புகழ்நூல் வெளியீடாவது அன்றிக் கழகப் புகழுக்குத் தோற்றுவாயாகவும் அமைந்தது. இதனைச் செய்த பெருமகனார் இவ் வரலாற்று நாயகரே ஆவர்.

கழகம் தொடங்கிய முதல் ஆண்டில் ஐந்து நூல்களும், இரண்டாவது ஆண்டில் ஏழு நூல்களும், மூன்றாவது ஆண்டில் 13 நூல்களும், நான்காவது ஆண்டில் 20 நூல்களும் என நூல் வெளியீடு ஆண்டுதோறும் வளர்ந்தன. 1961 ஆம் ஆண்டில்