பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

6

61

அதன் 1008 ஆவது வெளியீட்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வெளியீடுகள் மிகுந்து வந்தன. ஏறத்தாழ ஆண்டுக்கு 25 நூல்கள் விழுக்காடு தொடர்ந்து வெளியிட்டு வந்த பெருமை கழகத்திற்கு உண்டாயிற்று. அன்றியும் மூன்றாம் ஆண்டிலேயே கழக வளர்ச்சிக்கும் மொழிநலம் காத்தற்கும் செவிலியாக அமைந்த 'செந்தமிழ்ச் செல்வி' இதழ் தொடங்கிற்று. ஆதலால், ஆண்டுக்குப் பன்னிரண்டு இதழ்கள் வெளியிடும் பணியும் நூல் வெளியீட்டுப் பணியுடன் கழக முகவர்க்கு ணைந்து கொண்டதாம். கழக முகவர் பணிக்குக் கிடைத்த சம்பளம் உரூபா 35; தொகையைக் கருதிச் செய்யும் தொழில் வேறு, தொண்டு வேறேயன்றோ? இனிக் கழக முகவர் வெளியீட்டுப் பணியை கருதும்போது நம் நினைவில் முன்வருவோர் இருவர் ஆவர். அவர்கள் திரு. சி. மு. கோவிந்தராச முதலியாரும், திரு. காழி. சிவ. கண்ணுசாமிப் பிள்ளையும் ஆவர்.

கோவிந்தராசனார் சிறுமணவூர் முனுசாமி முதலியா புதல்வர் 1920 ஆம் ஆண்டில் 'சிவகாமி விலாச' அச்சுக்கூட என்பதை இலிங்கிச் செட்டித் தெரு 41 ஆம் எண் வீட்டில் நடத்திவந்தவர் அப்போது கழகக்கிளை 297 தம்புசெட்டித் தெருவில் நடந்து வந்தது. 'சிவகாமி விலாச' அச்சகத்தில் 'சிவஞான சித்தியார் சுபக்கம்இருவர் உரை' அச்சிடப்பெற்றது. பின்னர்க் கழகம்இலிங்கிச் செட்டித் தெருவு 306 ஆம் எண் வீட்டுக்கு மாறி சென்றது. ஆங்குக் கழகம் மேல் மாடியிலும் சிவகாமி அச்சகம் கீழ்ப்பகுதியிலுமாக இயங்கும் வாய்ப்புள தாயிற்று. இவ் வியைபுகள் கோவிந்தராசரையும் கழக முகவர் வ.சு. வையும் நெருக்கமாக இணைத்தன. இவ் விணைப்போ செந்தமிழ்ச் செல்வியைக் கொணரவும் வாய்ப்பாயிற்று. கழகத்தின் நூற்பணிகள் எல்லாம் சிவகாமி அச்சக வழியே நிகழலாயின.

கோவிந்தராசனார் அச்சுக்கலையில் அருந்திறலர். கண்கவர் வனப்பில் அச்சிடத் தேர்ந்தவர். அரும் பரிசுகள் பல, கழக நூற்பதிப்புக்கும் கட்டத்திறனுக்கும் கிடைக்க மூலமாக இருந்தவர்; திருக்குறள் என்னும் நூற்பெயருக்கு ஏற்பக் குறள்வடிவில் நூல் வெளியிட்டு உலாப்போதரச் செய்ததில் பெரும் பங்காளர் கோவிந்தராசாரே. பின்னர்த் திருவாசக மூலம் முதலியவற்றை அழகிய குறுவடிவில் கொணர உதவியவரும், அறிஞர் மு.வ. இயற்றிய 'திருக்குறள் தெளிவுரை' இடப்பால் உரையும் பலப்பால் பாடலுமாய் இனிதின் அமைய, எழிலுறப் பதிப்பிக்கத் துணை