பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

65

எண்களும் கையால் எழுதப்பெற்ற அல்லது அச்சிடப்பெற்ற துண்டுத் தாள்களை ஒட்டுதல் வேண்டும்.

"புத்தக இருப்பு வைத்திருக்கும் அறைகளில் சுவர்களின் ஓரத்திலும், கீழே பாவு கற்களுக்கு இடையிலும் செல்மருந்து திங்களுக்கு ஒருமுறை அடித்தல் வேண்டும். இருப்பு வைத்திருக்கும் அறையில் தூசி தும்புகள் சேராமலும் துண்டுத்தாள்கள் கீழே சிதறிக் கிடவாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்தப் பணியையும் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் உடனே செய்துவிடுதல் வேண்டும். புத்தக இருப்பு உள்ள அறைகளில் எலிகள் நுழைதற்கு வழியில்லாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். எலிகள் வரவது தெரியின் பொறி வைத்துப் பிடித்துவிடுதல் வேண்டும். புத்தக இருப்புள்ள அறை களில் மின்னிணைப்பும் மின்கம்பியும் செவ்வையாக உள்ளனவா என்பதை உன்னிப்பாகவும் இடையிடையேயும் கண்காணித்து கொள்ளுதல் வேண்டும்.

புத்தக வெளியீட்டு நிறுவனப்பணியிலே எத்தனை பணிகள் தொக்கிக் கிடக்கின்றன :

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்”

என்னும் ஆட்சிப்பணிகள் நான்கும்,

“ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும நன்றதன் காப்பு

என்னும் உழவுப் பணிகள் ஐந்தும்,

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்னும் மருத்துவப்பணி நான்கும் ஆகியன வெல்லாம் ஒருங்கே கொண்டது போலும் நூல் வெளியீட்டுப்பணி!

"திருவடிப்புகழ்மாலை என்னும் நூல், கழகத்தின் முதல் வெளியீடாக என் பார்வையிலேயே வெளியிடப்பெற்றது. திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி உரை கழகத்தின் இரண்டாவது வெளியீடாகவும், சோமேசர் முதுமொழி வெண்பா உரை மூன்றாவது வெளியீடாகவும் வெளியிடப் பெற்றன.