பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அதனால்

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

"அத்தொடக்க நாளில் என்ன என்ன நூல்களை முதற்கண் வெளியிட்டால் விற்பனையாகும் என்று கருத்துக் கொள்ள வில்லை. தொல்காப்பியம் மிகுதியாகப் பரவாதிருந்த காலம். தொல்காப்பியம் எழுத்து நச்சினார்க்கினியத் தையும், சொல் சேனாவரையத்தையும் அச்சிடவேண்டுமென்று கருதினோம். ககழகம் சைவசித்ாந்தம் பரப்பவேண்டுஎன்ற நோக்கத்தோடு அதன் பெயரையே சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமென் அமைத்தமையால் சைவ நூல்களை வெளியிட வேண்டுமென்ற முதன்மையான நோக்கத்தைக் கொண்டு அருணந்திசிவாசாரியார் இயற்றியருளிய சிவஞான சித்தியாரைச் சிவஞானமுனிவர் பொழிப்புரையுடனும் சுப்பிரமணிய தேசிகர் எழுதிய விருத்தியுரையுடனும், 'சிவஞானசித்தியார் இருவருரை' என்ற தலைப்பில் வெளியிட்டோம். தொல்காப்பியம் எழுத்து நச்சினார்க்கினியர் உரைக்குத் தாகூர் சட்ட புரிவுரையாளர் பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்களைக்கொண்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் முன்னுரை எழுதச் செய்தோம். இம் மூன்று நூல்களும் சிறந்த முறையில் வெளியிடப் பெற்றிருப்பினும், அவை விற்பதற்கு இருபது ஆண்டுகள் ஆயின எனின், அஃது உங்களுக்கு வியப்பாகவே இருக்கும்"

தொடக்ககால வெளியீடு பற்றி வ.சு. அவர்கள் எழுதிய இக் குறிப்புகள் கழகம் செந்தமிழும், சிவநெறியும் இரு கண்களெனப் போற்றி வளர்க்கக் கிளர்ந்த சிறப்பையும் பொருள்தேடல் ஒன்றுமே கழகத்திற்குப் பொருட்டன்று; நாடு எய்தும் நலமே பொருட்டு என்னும் சீரிய கோட்பாட்டையும் வெளிப்படுத்த வல்லன. தொடக்க வெளியீட்டு வரிசையிலேயே தொல்காப்பியம் இடம்பெற்றமை கழகப்பதிப்புச் சிறப்புக்கு வாய்த்த தனிப்பெரு முத்திரையாகும்.

கழகப்பதிப்புகள், ஏடுகளைக்கொண்டு ஆய்ந்து வெளியிடப் பெற்றுள்ள முதற்பதிப்புகள் அல். எனினும், ஏடுகொண்டு ஆய்ந்து பதிப்பித்தோர் பதிப்புகளில் காணப்பெற்ற வழுக் களையும் களைந்து, கழகம் செப்பமாகவெளிப்படுத்தியுள்ளது. எப்படி? கழகச் சொல்லதிகாரம் சேனாவரையப்பதிப்பின் (1923) உரிமையுரையில் வரும் ஒரு குறிப்பு:

"யான் மதுரைத் தமிழ்ச்சங்கத்துக் கல்லூரியில் கல்வி பயிலுங்காலத்து அச் சங்கத்துத் தொல்காப்பிய ஏட்டுப்பிரதி ஒன்றை உடன் வைத்துப் பயின்று வந்தேன். அப் பிரதியில் சில