பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

67

பாடபேதங்களும், திருத்தங்களும் கிடைத்தன. பின்னர்த், திருவாவடுதுறை யாதீன மடத்திற் கல்வி பயிலுங் காலத்து அவ்வாதீனத்துப் பிரதிகளிற் சில பாடபேதங்களும் திருத்தங் களும் கிடைத்தன. இத் திருத்தங்களும் பாட பேதங்களும் சொல்லதிகாரம் பயில்வார்க்குப் பெரிதும் பயன் படுமென வுன்னித் தன்னலங் கருதாது தமிழ்நலமொன்றே கருதி யுழைத்து வருபவரும், என் இன்னுயிர் நண்பருமாயி உயர்சைவத் திருவாளர் திருவரங்கம் பிள்ளையவர்கள் தங்கள் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக வாயிலாக இத் திருத்தங்களுடன் சொல்லதி காரத்தை அச்சுவாகனமேற்றி வெளியிட்டுள்ளார்கள் என்று அத்தொல்காப்பியப்பதிப்பில் மேற்கோள்களை விளக்கியும், திருத்தங் காட்டியும், குறிப்புரை வரைந்தும், அச்சுவழுக் களைந்தும் உதவி புரிந்த பேராசிரியர் சோழவந்தான் கந்தசாமியார் வரைந் துள்ளார். இக்குறிப்பு, கழகப்பதிப்புகளின் கட்டுக்கோப்பை நன்கு விளக்க வல்லதாகும்.'