பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




11. அடிமேல் அடி

(உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்திற்கோ இரு பக்கமும் இடி; சிலர் வாழ்விலோ எப்பக்கமும் இடி!)

கழக முகவராகச் சென்னையில் தங்கினார் வ.சு. கடையுணவு வீட்டுணவு ஆகுமா? கடையுணவாகவே, பெயருக்கு ஏற்ப இருந்தது! இயல்பாகவே இளமை முதல் நோய்க்கு ஆட்பட்ட வ.சு. விற்குக் கடையுணவும் உண்ண நேர்ந்தமை பெருநலக்கேடு ஆயிற்று.

இவருக்கு ஓரகவை நிரம்பா முன்னரே ஒருநாள், உடம் பெல்லாம் குளிர்ந்து 'உண்டோ? இல்லையோ?' என்னும் நிலைமை உண்டாயிற்று. பாளையங்கோட்டைத் தூயசவேரியர் உயர்பள்ளியில் நான்காம் வகுப்புப் பயின்றுகொண்டிருக்கும் போதிலேயே, நெஞ்சு வலி தாக்கியது. ஆங்கே, இரண்டாம் படிவம் பயிலும்போது குருதி குறைந்து சோகைநோய் ஆயிற்று. ஐந்தாம் படிவம் பயின்று கொண்டிருந்தபோதிலேயே மலச்சிக்கல் தொடுத்து. பள்ளி இறுதித்தேர்வு முடித்துக் கொழும்பு மையக் கல்லூரியில் (Central College) சேர்ந்து பயின்றுவந்த போதில், பருவ நிலை ஏற்றுக்கொள்ளாமல் ஊருக்குத் திரும்பிவர நேர்ந்தது. சென்னையில்கழகமுகவர் பொறுப்பில் இருந்தபோது 1922 பிப்ரவரித் திங்களில் கடுமையான மலேரியாக் காய்ச்சலுக்கு ஆட்பட்டார்.

முன்னேஏற்பட்ட நோய்களை உடனுக்குடன் ஒருவாறு தீர்த்து ஒழிக்க முடிந்தது. மலேரியாக் காய்ச்சல் தன் உரமெல்லாம் காட்டி ஒடுக்கியது; உடலை உரக்கி உறுத்துத் தாக்கியது. வெப்பம் 105 வரை' ‘106 வரை' என ஏறியது; வெப்பம் தணிந்து, வாழைத்தண்டெனத் தண்ணிதாய் மாறியது! ஒரு நிலைப்படாமல் இவ்வாறு உலுக்கியது.

இராயபுரம் மருத்துவமனையில் நோய் ஆய்வியல் (Pathology Professor) மருத்துவராகத் திரு. செ. சின்னசாமிபிள்ளை (M.B.C.M.) என்பார் ஒருவர் இருந்தார். அவர் சிவநெறியிலும், செந்தமிழிலும் சீரிய பற்றாளர். ஆதலால், இவர்க்கு ஆர்வத்தால் மருத்துவம்