பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

ஞாயிற்றுக் கிழமை.)

வீடு என்பது என்ன? விடுதலையாம்; துன்பத்தில் இருந்து விடுதலை பெற்று இன்புறும் இடமே வீடு! அதனை இன்பக்களம் ஆககுவாள் இல்லாள்: அவ்வில்லாளை, வாழ்க்கைத் துணையெனக் கொண்டவர் வாழ்வு இன்பநிலையமாம்; நல்ல மனைவியைப் பெற்றவர் வாழ்வு நாளும் சிறக்கும்; நாடுபுகழ் பேறும் நல்கும்! இல்லதென் இல்லவள் மாண்பானால் என்னும் பொன்மொழி இதனைத் தெளிவிக்கும்.

நன்மனைவி வாயாதவர் தலைநிமிர்ந்து நடக்கவும் இயலார்! அதிலும், பொதுப்பணியில் புகுந்தார்க்கு அவர்தம் மனைவியாரே ஆக்கமும் கேடுமாய் அமைவோர்! பொதுப்பணியில் புகழ்பெற்ற பெருமக்கள் புகழ்வாழ்வில் ஒருபாதி - ஏன் மறுபாதியில் மிகுதிப் பங்கும் கூட அவர்தம் இல்லக்கிழத்தியார் அன்பும் பண்பும் அரவணைப்பும் தூண்டுதலும் துணையும் துணிவும் கனிவும் பிறவு மாகியவற்றால் அமைந்தனவேயாம்! "கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி” என்னும் மொழியில் கொண்டானின் சிறப்புக்கெல்லாம் உரியவள் அவளே என்பது விளங்கும். அவன் கொண்டான் எனக் கொண்டாடப்படுவதே அவளால்தான்! 'தம்பொருள் என்ப தம்மக்கள்' என்பர்! மக்களே பொருள்! அவர்களையுடையவனே பொருளாளன். மனைவியே கொள்ளத் தக்கவள் அவளைக் கொண்டவனே கொண்டான் ஆதலால் நன் மனைவியாம் மங்கையர்க்கரசியாரைப் பெற்ற பேறே வ.சு. அவர்கள் வாழ்வின் பின்னைக் கடமைச் சிறப்புகளுக்கெல்லாம் அடிப்படையாய் அமைந்தது என்க!

மங்கையர்க்கு அரசியார் மலர்முகத்தர்; இனிய மொழியர்; கனிவு நெஞ்சர்; கணவரை உயிராகப் போற்றும் கடமையா; தம் பெற்றோரைப் போற்றிவந்த பெருநிலைபோலவே, தம் கணவரைப் பெற்ற தயாரையும் பேரன்பால் போற்றி ஒழுகினார். தம் உடன் பிறந்தாரையும் உறவாரையும் போற்றிக் காத்ததுபோலவே, தம் கணவனார் குடும்பம் சார்ந்தாரையும் அரவணைத்துக கொண்டார். தம் பெருந்தவப்பேற்றால் வாய்த்திருந்த தமக்கையார் நீலாம்பிகையார்க்கு நேயம் பெருகிய தங்கையாய்த் திகழ்ந்தார். தமையனார் தம்பியரை உளங்கொண்டு உவந்து போற்றுதலும் தம்பியார் தமையனாரை வழிகாட்டியாகக்கொண்டு அடிபற்றிச் செல்லுதலும் போலவே, அக்கையும், தங்கையும் அமைந்து குடும்பம் நடாத்தினர்! இவ்வன்பு நெறியே தமிழர்நெறி என்பதை வாழ்வால் மெய்ப்பித்தனர்.