பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

87

முழக்கமிட்டு வந்தவர் அவர்! தமிழுணர்வாளரைத் தழுவிக் கொள்ளுதலைத் தவமாகக் கொண்ட அவர், தொண்டர் வேலாவுக்குத் தொண்டு செய்ய முந்து நில்லாரா?

ஊழை உப்பக்கம் காணல்

வேலா மருத்துவ மனையில் இருந்த போதும் மருத்துவ மனை நீங்கி ஓய்வு கொண்டிருந்த போதும் நேரில் கண்டு எழுதிய காட்சி நிலை இது:

"வேலா நலமாக இருக்கிறார்! மிக நலமாக இருக்கிறார்; மிக மிக நலமாக இருக்கிறார்! அவர் எப்படி நலமாக இருக்க வேண்டும்! அவர் எப்படி நலமாக இருக்க வேண்டும் என நாம் எண்ணுகிறோமோ, அதற்குமேல் நலமாக இருக்கிறார்."

"வேலா உடலைப் பற்றியது நோய்! அவர் உளத்தைப் பற்றியதன்று! உடலளவில் அமையும் நோய் உளத்தை என் செய்யும்? உணர்வை என் செய்யும்? தோற்றுத் தோற்று ஒடுங்கும்! முகம் காட்டாது முக்காடிட்டுக் கொண்டும் ஓடும்! இவற்றை உணர்ந்து கொண்டவர் வேலா! நன்றாக மிக மிக நன்றாக உணர்ந்து கொண்டவர் வேலா! அவர் வெற்றி ஓங்கியுள்ள விழுப்ப நிலை இது!"

-

"வேலா நகைக்கிறார்! நலம் வினவி வருபவரை நோக்கி வரவேற்கும் 'வரவேற்பு நகைப்பு' என எண்ணுவதா? அது ஏமாற்றும் நகைப்பு! என்னை நோய் வருத்துமோ? வருத்தவும் கூடுமோ? தாங்கள் கவலை விடுக! என் நகைப்பைப் பார்த்த அளவானே யான் நோயை வென்ற வெற்றி வெளிப்படுமே! என நகைக்கும் வள்ளுவ நகைப்பு! இடுக்கண் வருங்கால் நகுக எனத் தெளிந்து பண்பட்ட நகைப்பு! வேலா ஒரு நகைப்பா நகைக்கிறார்? வள்ளுவ நகை நகைக்கிறார்! திருத்தக்கர் நகை நகைக்கிறார்! நடமாடும் நாவரசர் நகை நகைக்கிறார்! தமிழ்த் தென்றல் திரு.வி.க. தேர்ச்சியில் தோய்கிறார்! எப்படி?"

வேலா உள்நகை நகைக்கிறார்! வெளிப்பட்டும் வெளிப் படாக் குறுமுக்கையாம் முகை மொக்குள் நகை நகைக்கிறார் - இது வள்ளுவர் நகை.

66

இடுக்கண் வந்துற்ற காலை எரிகின்ற விளக்குப் போல நடுக்கமொன் றானுமின்றி நகுக”

என்னுமாப் போல நகைக்கிறார் -இது திருத்தக்கர் நகை.