பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

89

"உடல் நலிவுற்ற நேரத்திலும் நோயை பொருட் படுத்தாது, அன்னைத் தமிழ் ஆட்சி பெறு" என்று முழக்கமிட்டுக் கொண்டாடுபவர்.வ.சுப.மாணிக்கனார்த் தலைமையில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி.ஐயர் அவர்களுடன் சென்னை நெடுவீதியில் நடந்து வந்ததை எந்தத்தமிழ் நெஞ்சமும் மறக்காது" என்பது அது.

அமெரிக்க நாட்டு மருத்துவ மனையில் இருந்து மீண்ட அண்ணா, தமிழ்நாடு, என்னும் பெயர் சூட்டு விழாவில் பங்கு கொள்வதற்கு இல்லாமல் இவ்வுடல் இருந்தென்ன என்று சொல்லிக் கலந்து கொண்டது போன்ற நிகழ்வன்றோ இது.

உரையும் பாட்டும் உடைமை

வேலா நோயுற்றார் என்பதை அறிந்த அளவான் 'அவர் நலம் பெற்றார்' என்பதை அறிய அவாவியவராய் உரையும் பாட்டுமாய் எத்தனை எத்தனை அறிஞர்கள், அன்பர்கள், ஆர்வலர்கள் எழுதினர்! உரையும் பாட்டும் உடைமையைச் சங்க நாள் பெருமக்கள் எத்துணை மதித்தனர் என்பதற்குப் புறநானூறும் பதிற்றுப் பத்தும் பத்துப்பாட்டும் சான்று!

குறளியம் இதழில் வேலா வாழ்த்தரங்கம் (9-9-25) வெளி வந்தது. அதற்கு, முன்னும் பின்னும் இடமும் பெற்றது அது. அதில் சில பாடல்களும் - தொடர்களும் - உரைக்குறிப்புகளும்;

“செந்தமிழே நம்தாய்; திருக்குறளே நம்மறை: நந்தா ஒழுக்கமே நம்படை; - உந்துமுனை வேலாவே நம்தலைவன்; வெள்ளைக் குறளியமே தோலாத நம்முரசுத் தூண்”

“வேலா அரசன்; வெறிதமிழ் அந்தணன்; முப் பாலார் குறளின் பரப்பாளி; - மேலார் குறளாயங் கண்டான்; குறளியமும் கண்டான்,

திறலாக வாழ்க திளைத்து."

வ.சுப. மாணிக்கனார்

வாழ்த்திக் களித்தனன்; வளர்பணிக்கென்தலை

தாழ்த்திக் குளிர்ந்தனன்; தமிழ்ப்பகை தகர்க்கும்

வேலா? எனப்பகை விதிர்க்க, குறட்பணி

ஆளும் அரச எனப்பலர் போற்ற