பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

103

ஆதலின், அன்பு கொள்ளுங்கள், செயல்பட விறு கொள் ளுங்கள். திருக்குறட் சமயம் பல்லாற்றானும் உருக்கொள்ள உங்கள் கருத்துக்களைத் தவத்திரு. குன்றக்குடி அடிகளாருக்கும் எழுதுங்கள். அதன் படியொன்று எனக்கும் அனுப்புங்கள்.

கடை விரித்தேன் கொள்வாரில்லை' என்னும் ஏக்கச் சொற்கள் இனி நம்மிடை நடமாடக் கூடாது. கட்டுண்டோம்; பொறுத்திருந்தோம்; காலம் வந்து விட்டது; எக்கயமையையும் வெல்வோம் என்ற சூளுரை பிறக்கட்டும் என ஆசிரிய உரை வழியே அறை கூவல் விடுத்தார் வேலா.

திருக்குறட் சமயம்

இவ் வறைகூவல் தூண்டில் எங்கிருந்து கிளர்ந்தது. அடி களாரிடமிருந்து கிளர்ந்தது. 3-12-81-இல் ஒரு கடிதம் வரைந்தார் அடிகளார்.

சேலம் மாவட்டத் திருக்குறள் பேரவை மாநாட்டில் தாங்கள் ஆற்றிய சொற்பொழிவு எழுச்சி மிக்கதாக இருந்தது. தங்களுடைய ஆர்வத்திற்கு நமது உளம் நிறைந்த பாராட்டுகள்.

தாங்கள் இந்துமதம் என்ற கூட்டில் இருந்து பிரிந்து தமிழர் மதம் என்ற பெயரில் ஒன்றை உருவாக்க வேண்டுமெனக் குறிப்பிட்டீர்கள். அஃது ஏற்கத் தக்கதே. ஆயினும் 'தமிழர்' என்ற அடைச்சொல்லோடு இனம் பிரித்துக் காட்டி மதக் கொள்கையை நிறுவினால் வளர்ந்து வரும் உலகப் போக்கில் இடர்ப்பாடுகளும் நிறைய ஏற்படும். அஃது உலகளாவிய கொள்கையாக விரைந்து ஏற்றுக் கொள்வதில் மற்றவர்களுக்குத் தயக்கமும் புழுக்கமும் ஏற்படும். சென்ற காலத்தில் தலைவர் பெரியாரும் பேரறிஞர் அண்ணா அவர்களும் தமிழின உணர்வுக்கு வித்திட்டு அது 'ஓகோ' என்று சிறப்பாக வளர்ந்து வந்ததும் இப்போதைய நிலையில் அந்த உணர்வு சீர்குலைந்து விட்டதையும் வரலாற்றுப் போக்கில் நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். இதைப் போலவே 'தமிழர்மதம்' என்பதும் நிலை கொள்ள இயலா நிலைக்குத் தள்ளப்படலாம்.

ஆதலால், நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள திருக்குறள் கூறும் சமயத்திற்குத் 'திருக்குறட் சமயம்' என்று அமைத்து அவ்வழியாகவே தமது சமய நெறியை வளர்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

திருக்குறட் சமயம் அமைப்பும் நமது திருக்குறள் பேரவை உறுப்பினர்கள் முதலில் வாழ்க்கையில் ஏற்று ஒழுகத்தக்கதாக