பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

கொஞ்சுதமிழ்ச் செந்தேனே! கலைஞர் அவர்களே! நீங்களும் மறுக்காது மனமாற்றம் இல்லாது மதுரை நோக்கிச் சேர்ந்து வாருங்கள்.குடிமைக்கு முன் காழ்ப்பு ஏது? எல்லாம் தூள்... தூள்..! நீங்கள் சொல்லும் பாடம்தானே!

நீங்கள் இருவரும் அண்ணாவின் தம்பிகள் என்றால் தமிழிற்காக, தமிழ் மாநாட்டிற்காக ஒன்று படுங்கள்; அரசியலை இதில்விதைக்காதீர்கள். இல்லையேல் தமிழினம் மறக்காது. வரலாறு எதையும் விடாது - வேலா.

ஆசிரிய உரை முழுமையும் இது! அவர் தம் உணர்வு மீக்கூர்ந்த ஆசிரிய உரைக்கு எடுத்துக்காட்டாக மட்டுமா இயல்வது! வேலாவின் குடியோம்பும் திறம் காட்டும் சான்று ஈதன்றோ! மாற்றார்க்கு இடம்தராது, மனமொத்து இனநலங் காக்க உருக்கமாக வேண்டும் வேண்டுதல் அன்றோ இது!

66

"ஆசிரிய உரை சரியானதே; ஆசிரியர் எது பற்றியும் எழுதும் உரிமை படைத்தவர். அவர் கருத்துத்தான் மக்கள் கருத்து” என்று இதனை வரவேற்றார் முத்தமிழ்க்காவலர்.

"இருவரும் ஒன்றுபட்டு நிற்பார்களானால் அதனடிப் படையாக ஏற்படும் திராவிட இயக்க வலிமையை இந்தியாவில் எந்த ஓர் ஆற்றலாலும் அழித்துவிடமுடியாது என்பது பனிமலை போலும் உண்மை. இனநலம் கருதும் நல்லோர் பலரும் நடுநிலை யாளர் சிலரும் எதிர்பார்ப்பதும் இதையே" என்று பாவலரேறு பகர்கின்றார்.

"கலைஞருக்குத்தான் நீங்கள் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருக்கிறீர்கள். இருப்பினும் வேறு ஏதேனும் நிகழ்ச்சிகள், நெருக்கடிகள் ஏற்பட்டு உங்கள் நல்ல வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொள்வாரானால் நானே அதில் மகிழ்ச்சி அடையும் முதல் தமிழனாக இருப்பேன்" என முனைவர் சாலையார் சாற்றினார்.

“கலைஞர், திண்மையான இதயம் பெற்றவர். அது மட்டுமா? எதையும் தாங்கும் இதயம் பெற்றுத் தமிழினத்தை வாழ்வித்த அறிஞர் அண்ணாவின் இதயத்தையும் அல்லவா வாங்கி வைத் துள்ளார். அதனால் தானே துன்பங்கள் இழைத்த இந்திரா அம்மையாருடன் நட்பும் உறவும் கொண்டுள்ளார். ஆனால், இதே பண்பு ஏன் உடனாளர்களிடம் செயற்படவில்லை. சிந்திக்க வேண்டிய ஒன்று. நாம் சிந்திக்க முடியாமல் சங்கடப்படுகிறோம். வழக்கம் போல் கலைஞர் தான் துணை செய்ய வேண்டும்.