பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

இசுலாமாபாத்தும் வேளாங்கன்னியும் மீனாட்சிபுரமாக மாறும் என்னும் ஆசிரிய உரை ஏழு குறிப்புகளை வைத்து மேலுமோர் வினாவை எழுப்புகின்றது.

1.

2.

3.

4.

5.

6.

7.

சாதி வேறுபாடுகள் இந்து மதத்தில் இருந்து அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

உரிய தகுதியுள்ள அனைவரும் கோயில்களிலும் திருமடங்களிலும் (சாதி வேறுபாடுகளின்றி) அனைத்துப் பொறுப்புகளிலும் இடம் பெற வேண்டும்.

அறிவியலுக்கும் உண்மைக்கும் மாறான பொய்யுரைப் புராணங்களையும் பழக்க வழக்கங்களையும் மூட்டை கட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

வருணாசிரமம் ஒழிக்கப்பட்ட புதிய இந்து மதம் நிறுவப்பட வேண்டும்.

-

தாய்மொழி வழிபாடு உரிமையாக்கப்பட வேண்டும். கூட்டு வழிபாடு என்ற பொய்மை எல்லாச் சமயங் களிலும் புரையோடி விட்டது. இறைமை உணர்வு என்பது தன் தனிஉள -மயற்சி. அகவழிபாடு என்பதே நம் மெய்ப் பொருள் உணர்த்துகிறது. இறைமை உணர் வைக் கூட்டுவழிபாட்டால் பெற இயலாது.மனத்துக் கண் மாசிலனாகி அகவுணர்வு பெற்றுப் பேரா இயற்கை பெறலே நம் இறைமைக் கொள்கை.

இந்து சமயத்தில் நுழைந்திருக்கும் மற்றை இழிமை களைப் போக்க அவ்வப்போது அறிஞர் பெருமக்கள் கூடி ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும்,

காஞ்சிமடத்திற்கும் மதுரை ஆதீனத்திற்கம் தகுதியுடைய இன்றைய தாழ்த்தப்பட்ட ஒருவர் இளவல் பொறுப்புத்தலைமை ஏற்றப்பின் திருமடத் தலைவராக வேண்டுமி. அன்றுதான் இந்து மதம் தலைநிமிர்ந்து நிற்கும். மீனாட்சிபுரம் என முழங்கும் இவர்கள் இதற்கு ஆட்படுவார்களா? என்பது அது,

"நம் கோயில்களில் படிந்தகறை" என்பதோர் ஆசிரிய உரை (1:2)

திரு நணா (பவானி கூடுதுறை)க் கோயிலில் கோடி அர்ச்சனை! பாவேந்தர் பட்டடை ஈரோடு இராமலிங்கனார் பாவலர் ஈவப்பனாருடன் கோயிலுள் சென்று நால்வரை