பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஈரோடு வேலா (வரலாறு)

129

'ஆனால் ஒன்று, தாங்கள் சான்றோரால் எண்ணப் படாதவர் ஆகிவிடுவீர்கள்.பேரறிஞர் அண்ணா போல், பெருந்தலைவர் காமராசர் போல் மூதறிஞர் இராசாசி போல் என்றும் சான்றோரால் எண்ணப்படத்தக்கவராகத் தாங்கள் திகழ வேண்டும் என்பதே எங்கள் அவா."

"அரசுப் பணிகளில் திருவள்ளுவர் ஆண்டைப் பதிக்கச் சொன்னீர்கள். எங்கள் நெஞ்செல்லாம் பூரித்தது.

"கேரளத்திலே போய் நான் தமிழன் என்று சொல்லிய உலகத் தமிழ் மாநாடு நடத்திய உங்களைக் கொஞ்ச நினைக்கிறது.

"யாரோ உங்களைப் பள்ளத்தில் இடறச் செய்கிறார்கள். பெருமதிப்பிற்குரிய புரட்சித் தலைவர் அவர்களே! இருகரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறோம். மதுவிலக்கை நீக்க வேண்டாம். தற்கொலை முனைப்புக் கொடுமைக்கு ஆளாக வேண்டாம். குடியைக் கெடுப்பது குடியே! அதுவே மக்கள் தலை மேல் விழுகின்ற இடி'

19

எவ்வளவு நயம்! எவ்வளவு கெஞ்சுதல்! எவ்வளவு மன்றா டுதல்! பின்னரும் என்ன? மீண்டும், கலைஞர் ஆட்சி தளிர்க்க வேண்டும் என விழைந்த வேலாவுக்குக் களிப்பூட்டிய ஆட்சி தோன்றியும் "மலிவு விலை மதுவை அரசே வழங்கும்" என்ற செய்தி தாங்கிக் கொள்ள முடியாததாயிற்று! குடிப்பழக்கம் குடும்பத்தை அழிப்பதைக் கண்ணாரக் கண்டிருந்தும் அதனை விலக்காமல், மலிவு விலையில் அரசே தருவது என்பது எவ்வளவு தீமையானது என வெம்பினார். கண்ணீர்விட்டு மன்றாடுகிறோம்; மலிவு விலை மது வேண்டா' என ஆசிரியவுரை வரைந்தார். மகளிரியக்கத்தவரின் மதிக்கத்தக்க கருத்துக்களையும் வெளி யிட்டார்! இவ்வளவும் வென்றனவா? இன்றுவரை ஆகவில்லை! ஈழத்தமிழகம்

தமிழ் உணர்வு இளந்தை முதலே பெற்றுப் படிப்படியே வளர்ந்து வருவதுடன் வளர்த்து வருபவரும் வேலா. அவர் தமிழினப் பற்றுமைக்குச் சான்று பல வேண்டுவதில்லை. ஈழச் சிக்கல் பற்றிய அவர்தம் சிந்தனை எத்தனை இதழ்களின் ஆசிரிய உரைகளாக விளங்குகின்றன என்பதைக் கண்டாலே தெளிவாகி விடும்.

"செந்நீரும் கண்ணீரும்" என்பதில் அவர் உருகி உருக்கும் செய்தி (1:12) “ஆ, அய்யோ! அய்ய்யயோ! ஆங்...ஆங்கு... ஆங்;