பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

133

அவர்களும் "மூதறிஞர் செம்மல் வ.சுப. மா. மறைந்தாரே (9:10) என மாணிக்கனாரும், அருந்தமிழ் வல்லார் மறைவு (9:11) என முனைவர் க.த. திருநாவுக்கரசு, திரு. மு.ரா. பெருமாள், புத்தனேரி சுப்பிரமணியம் ஆகியோரும் நினைவு கூர்ந்து புகழப் பெறு கின்றனர்.

இன்னலும் இரங்கலும்

-

ஆய்வுரை

மை

திரு.கி.வீரமணியைக் கொல்லும் நோக்குடன் ஒரு கூட்டம் கிளர்ந்தது. அதனைக் கண்டிக்கும் வகையால் எழுந்தது. போல் காப்போம்" என்னும் ஆசிரிய உரை (3:1)

CC

'இது நாடா; காடா என்ற ஐயம் எழுகிறது; குருதி கொதிக்கிறது; நெஞ்சு படபடக்கிறது" எனத் தொடங்கும் உரை, வீரமணியை நம்மிடை வாழும் வீரப் பெருமகனாகக் காண்கிறேன். அவரை இச் சனாதனக் கயவர்களிடமிருந்து காத்தாக வேண்டும். இக்கயவர்கள் மக்களைப் போன்றே இருப்பர். இக்கயவர்கள் நம் நட்பு அணிகளில்கூட (திக. தி.மு.க. அ.தி.மு.க.) ஊடுருவி இருப்பர். தமிழ்த் தலைவர்களாகவும் இறைமை உணர்வுடையவர்களாகவும் வாழ்ந்து தந்தை பெரியாரின் பணிகட்கு உறுதுணையாக இருந்த தவத்திரு ஞானியாரடிகள், தவமிகு மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க. முதலானவர்களின் அடியொற்றி வாழும் இறைமைப் பற்றாளர்களாகிய நாம் ஒருங்கு சேர்ந்து வீரமணி அவர்களின் உயிருக்கு ஊறுவிளைப்போரை அடையாளம் கண்டும் காட்டியும் வேரறுக்க வேண்டும்" என்று வளர்ந்து, கொத்தளம் ஏறியும் கொத்தடிமை ஆயினரே என்ற அவர் சொல்லுக்குத் தமிழக அரசு வரலாற்றில் இடம்பெறக் கூடாது. காமராசர், பக்தவத்சலம் ஆட்சி கூடத் தந்தை பெரியாரைக் கண் இமை போல் காத்ததை நாம் மறத்தல்கூடாது என நிறைகின்றது. கால இணைப்பு கருத்து இணைப்பு - கொள்கை இணைப்பு கருத்து இணைப்பு - கொள்கை இணைப்பு இன்னவெல்லாம் படம் பிடித்துக் காட்டும் நெறிப் பாட்டுரை இவ்வாசிரிய உரையாம்.

-

"அன்னை இந்திராவின் உண்மையான வாழ்க்கை வரலாறு எதிர்கால மக்கட்குக் கிடைத்த அரிய வழிகாட்டியாகும்" என்று இரங்கல் உரை தொடங்கும் வேலா, அவர் வாழ்வு வழிகாட்டியா தலைப்படம் பிடித்துக் காட்டுகிறார். ஒன்று நேரிடை அரண்மிக்க சான்று! மற்றொன்று எதிரிடை முரண்மிக்க சான்று! இருவகை யானும் அரசியலாளர் ஏற்க வேண்டுவதும் தவிர்க்க வேண்டு வதுமாம் - சான்றாதலை இந்திரா அம்மையார் செயற்பாட்டுப் பண்பியல் காட்டி நிறுவுகிறார்.