பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

135

நாட்டின் உரிமைப் போராட்ட அன்றைய நிகழ்வுகள் அவருடைய ஓரசைவை ஏற்படுத்தின. இந்நிலையில் கலைஞர் கருணாநிதி அவர்களின் தொடர்பும் அவர்தம் கொள்கையினர் தொடர்பும் புராணப் புரட்டுகளைத் தெளிவாகப் புலப்படுத்தி மாந்த உணர்வை நெஞ்சிலே நிறுத்தியது. கலைஞரின் தெடர்புதான் இவரை நெறிப்படுத்தியது. இதுவே இவரது உள்ளத்தைப் புரட்சியாக்கி முழுக் கல்வியானது. இவர்தம் இளமையிற்பட்ட ஏழ்மையும் தொல்லைகளும் இவருக்கு மாந்த உரிமைகளுக்கு ஏங்கும் மனத்தை அளித்தது.

"காட்சிக்கரிய கமுக்கம் மிக்க இவர்க்கும் அக வாழ்க்கையில் பல தோல்விகள் உண்டு. ஆனால் அத்தோல்விகளால் மனம் துவளாது தம் வாழ்க்கையை இறுதிவரை மேம்படுத்திக் கொள்ள முயன்றார்."

"மொத்தத்தில் இவர் பெருமைக்கும் புகழுக்கும் வெற்றிக்கும் முழுக் கரணியம் தம்மைப் பிறரிடத்தில் நல்லவராக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே, இவரை நல்லவராகச் செய்துவிட்து. இந்திய நடுவண் அரசையும் இவரது புகழுக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இயங்கவும் செய்து விட்டது" என்னும் ஆசிரிய உரை வேலாவின் ஆழ்ந்த பார்வையைத் தெளிவிக்கிறது. இரங்கல் வேளையில் எண்ணிப் பார்க்கும் மதிப்பீடு இது. (8:6)

படையல்

குறளியத்தின் ஒவ்வோர் ஆண்டின் முதல் இதழும் முறையே பெருமக்கள் வேலாயுதனார், முத்தமிழ்க் காவலர், தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருக்குறளார், பன்மொழிப் புலவர் கா.அப்பாத் துரையார், பெரும் புலவர் மீ. தங்கவேலனார், பேரறிஞர் வ.சுப. மாணிக்கனார், அண்ணலார் பு.சுப்பிர மணியனார், படைமேல்நர் த. சாமிநானார், கு. ச. ஆனந்தனார் ஆகியவர்களுக்குப் படையலாக்கப்பட்டுள்ளன. தொண்டரை மதித்துப் போற்றுதல் தொண்டர் கடனே அன்றோ!

7

இதழ்படையல் செய்யப்பட்டுள்ள பெரு மக்களின் தகவு செவ்விதே என்பதைக் காட்டுவது போல் அரசின் திருவள்ளுவர் விருது முத்தமிழ்க் காவலர், குன்றக்குடி அடிகளார், வ.சுப.மா. கு.ச. அனந்தனார் ஆகியோர்க்கு வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ந்து பாராட்டுதற்கு உரியதாம்.